கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம்‌ முதுநிலை மற்றும்‌ முனைவர்‌ பட்டப்படிப்பு (Ph.D) 2022-23 மாணவர்‌ சேர்க்கை துவக்கம்‌..!

இவ்வாண்டு மாணவர்‌ சேர்க்கைக்கு இணையதளம்‌ (https://admissionsatpgschool.tnau.ac.in/) மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்‌. 27.06.2022 அன்று முதல்‌ தொடங்கி 08.08.2022 (நள்ளிரவு 11.59 மணி) வரை மட்டுமே விண்ணப்பதாரர்கள்‌ இணையவழியாக விண்ணப்பிக்கலாம்‌.



கோவை:தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ முதுநிலை மற்றும்‌ முனைவர்‌ பட்டப்படிப்பு (Ph.D) 2022-23 மாணவர்‌ சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ முதுநிலை பட்டமேற்படிப்பு பயிலகம்‌ வாயிலாக 8 கல்வி வளாகங்களில்‌ 32 துறைகளில்‌ முதுகலைப்‌ படிப்பையும்‌, 28 துறைகளில்‌ முனைவர்‌ பட்டப்‌படிப்பையும்‌ வழங்குகிறது. 2022-23 ஆம்‌ கல்வி ஆண்டிற்கான முதுகலை மற்றும்‌ முனைவர்‌ படிப்பிற்கான மாணவர்‌ சேர்க்கை செயல்முறை 27.06.2022 அன்று முதல்‌ தொடங்குகிறது.



இவ்வாண்டு மாணவர்‌ சேர்க்கைக்கு இணையதளம்‌ (https://admissionsatpgschool.tnau.ac.in/) மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்‌. 27.06.2022 அன்று முதல்‌ தொடங்கி 08.08.2022 (நள்ளிரவு 11.59 மணி) வரை மட்டுமே விண்ணப்பதாரர்கள்‌ இணையவழியாக முதுகலை மற்றும்‌ முனைவர்‌ பட்டப்படிப்புக்கு à®µà®¿à®£à¯à®£à®ªà¯à®ªà®¿à®•்கலாம்‌.

இளநிலை, முதுநிலை (B.SC / M.Sc/M.Tech) முடித்த மாணவர்கள்‌ பட்டப்படிப்பு சான்றிதழ்‌ (Provisional Degree Certificate) மூலமாகவும்‌, தற்பொழுது இறுதியாண்டு பயிலும்‌ மாணவர்கள்‌ பல்கலைக்கழக பதிவாளர்‌ (à®…) கல்லூரி முதல்வர்களிடம்‌ பெற்ற படிப்பு முடிவுற்ற சான்றிதழ்‌ (Course Completion Certificate) மூலமாகவும்‌ விண்ணப்பிக்கலாம்‌.

எனினும்‌ பட்டப்படிப்பு சான்றிதழைச்‌ சமர்பித்த பின்னரே மாணவர்‌ சேர்க்கை உறுதி செய்யப்படும்‌. மேலும்‌ விவரங்களுக்கு, முதுநிலை மாணவர்‌ சேர்க்கை (2022-23) குறித்த தகவல்‌ கையேட்டை படிக்குமாறு மாணவர்கள்‌ அறிவுறுத்தப்பட்டு உரிய நேரத்தில்‌ விண்ணப்பங்களைச்‌ சமர்ப்பிக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

மாணவர்‌ சேர்க்கை தொடர்பான ஐயப்பாடுகளுக்கு [email protected] என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கு மின்‌அஞ்சல்‌ அனுப்பலாம்‌. நேரடியாக தொடர்பு கொள்ள 94690-50710 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...