கோவை TNAU-வில்‌ மாணவர்களுக்கான ஊக்கமளிக்கும்‌ மற்றும்‌ தொழில்‌ வழிகாட்டுதலுக்கான சிறப்பு நிகழ்ச்சி..!

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோவை வளாகத்தில்‌ பயிலும்‌ இளநிலை இறுதி ஆண்டு, முதுநிலை மற்றும்‌ மூதறிவியல்‌ மாணவர்களுக்கு இவ்விழாவானது ஏற்பாடு செய்யப்பட்டது.


கோவை: கோவை TNAU-வில்‌ மாணவர்களுக்கான ஊக்கமளிக்கும்‌ மற்றும்‌ தொழில்‌ வழிகாட்டுதலுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, மாணவர்‌ நல மையம்‌ சார்பில்‌ மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும்‌ உரை மற்றும்‌ தொழில்‌ வழிகாட்டுதலுக்கான சிறப்பு நிகழ்ச்சி 20.06.2022 அன்று அண்ணா அரங்கத்தில்‌ நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோவை வளாகத்தில்‌ பயிலும்‌ இளநிலை இறுதி ஆண்டு, முதுநிலை மற்றும்‌ மூதறிவியல்‌ மாணவர்களுக்கு இவ்விழாவானது ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு முனைவர்‌.நா.மரகதம்‌, மாணவர் நல மையம்‌, முதன்மையர்‌ வரவேற்புரை அளித்தார்‌. இந்த நிகழ்ச்சியை பல்கலைக்கழக துணை வேந்‌தர்‌ பேராசிரியர்‌.வெ.கீதாலெட்சுமி முன்னிலை வகித்து தலைமை உரையாற்றினார்‌.



கனடா நாட்டிலிருந்து வருகை புரிந்த தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்லைக்கழக முன்னாள்‌ மாணவர்‌ முனைவர்‌.சங்கரன்‌ கிருஷ்ணராஜ்‌, பொது இயக்குநர்‌, வேளாண்மை மற்றும்‌ வேளாண்‌ உணவுத்‌ துறையின்‌ திட்ட கிளை, சேவைகள்‌ மற்றும்‌ திட்ட சிறப்பு இயக்குநர்‌, கனடா, மாணவர்களுக்கு ஊக்கமளிக்‌கும்‌ விதமாகவும்‌ மற்றும்‌ தொழில்‌ வழிகாட்டுதல்‌, அயல்நாட்டில்‌ மேற்படிப்பு மற்றும்‌ பணிபுரிவதற்கான வழிமுறைகளை மாணவர்களுக்கு விளக்‌கமாக எடுத்துரைத்தது மட்டுமன்றி மாணவர்களால்‌ கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எளிதில்புரியும்‌ வண்ணம்‌ பதிலிளித்து உரையாற்றினார்‌.

இந்நிகழ்ச்சிக்கு முனைவர்‌. என்‌.வெங்கடேச பழனிசாமி, முதன்மையர்‌ (வேளாண்மை), முனைவர்‌. எ. லட்சுமனன்‌, முதன்மையர்‌ (முதுநிலை), மற்றும்‌ முனைவர்‌ .எ.ரவிராஜ்‌, முதன்மையர்‌ (வேளாண்‌ பொறியியல்‌), த.வே.ப.க. கோவை ஆகியோர்‌ விழாவில்‌ பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்‌.

முனைவர்‌. ப.முத்துலட்சுமி, பேராசிரியர்‌ (தாவரநோயியல்‌), மாணவர் நல மையம்‌, த.வே.ப.க, கோவை நன்றியுரையாற்றினார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...