கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் அறிவியல் வினாடி-வினா நிகழ்ச்சி..!

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில், சுதந்திரத்தின் வைர விழா ‘அம்ருத் மகோத்சவத்தை’ கொண்டாடும் வகையில், கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.


கோவை: கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் அறிவியல் வினாடி-வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில், சுதந்திரத்தின் வைர விழா ‘அம்ருத் மகோத்சவத்தை’ கொண்டாடும் வகையில், கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல் வினாடி-வினா போட்டி (08.06.2022) அன்று நடத்தப்பட்டது.



இப்போட்டியில் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம், வேலூர் வி‌ஐ‌டி பயோ சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரி, திருவல்லா மார் அத்தனாசியோஸ் உயர்கல்வி கல்லூரி, கேரளா, கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி கழகம், கோவை காருண்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் மற்றும் அலகாபாத்தில் உள்ள சாம் ஹிக்கின்போட்டம் வேளாண்மை, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களைச சேர்ந்த, 50-மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.



வினாடி வினா போட்டியை நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி முனைவர் து.புத்திர பிரதாப், நடத்தினார். போட்டியின் துவக்கத்தில், "ஜானகி அம்மாள்", "சி.ஏ.பார்பர்", "டி.எஸ்.வெங்கடராமன்", "நார்மன் போர்லாக்" மற்றும் "எம்.எஸ்.சுவாமிநாதன்" என ஐந்து அணிகள் பிரிக்கப்பட்டன .

ஐந்து பொது சுற்றுகள், அதைத் தொடர்ந்து ஒரு காட்சி சுற்று மற்றும் ஒரு பஸ்சர் (buzzer) சுற்று என ஏழு சுற்றுகளுடன் வினாடி வினா போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.



முதன் முதலில் ‘பச்சை ஒளிரும் புரதம்’ பிரித்தெடுக்கப்பட்ட உயிரினத்தின் பெயர், (கோவாக்ஸின் தடுப்பூசியினை உருவாக்கிய) விஞ்ஞானி ‘கிருஷ்ணா எல்லா’வின் படத்தை கண்டுபிடிக்கும் வினா போன்ற கடினமான கேள்விகளைத் தவிர, பெரும்பாலான கேள்விகளுக்கு அணிகள் உற்சாகமாக பதிலளித்தன.

போட்டியின் முடிவில் “ஜானகி அம்மாள்” அணியானது, 65-புள்ளிகளுடன் முதலிடத்தையும், “நார்மன் போர்லாக்” அணி (60 புள்ளிகள்), “எம்.எஸ்.சுவாமிநாதன்” அணி (55 புள்ளிகள்), “டி.எஸ்.வெங்கடராமன்” அணி (50 புள்ளிகள்) மற்றும் "சி.ஏ. பார்பர்" அணி (20 புள்ளிகள்) அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தன.



வெற்றி பெற்ற அணியினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. கேள்விகளுக்கு பதிலளித்த பார்வையாளர்களும் பரிசுகளைப் பெற்றனர்.

முன்னதாக, கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ஜி.ஹேமபிரபா, வினாடி-வினா போட்டியை தொடங்கி வைத்து பேசுகையில், கல்லூரி மாணவர்களுக்காக, கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் இத்தகு வினாடி வினா போட்டி நடத்தப்படுவது இதுவே முதன்முறை எனக் குறிப்பிட்டு, இத்தகைய வினாடி வினா நிகழ்ச்சிகள் குழு மனப்பான்மையை ஊக்குவிக்கின்றன, எனவும் கூறினார்.

வினாடி வினா போட்டியின் நடுவர்களாக நிறுவனத்தின் பயிர் பாதுகாப்பு பிரிவின் தலைவர் முனைவர் R. விஸ்வநாதன், பயிர் உற்பத்தி பிரிவின் தலைவர் முனைவர் சி.பழனிசாமி, முதன்மை விஞ்ஞானி முனைவர் ஏ.ரமேஷ் சுந்தர், பயிர் பெருக்க விஞ்ஞானி முனைவர் எச்.கே.மகாதேவசாமி செயல்பட்டனர்.

வினாடி வினா நிகழ்ச்சிக்கு, முதன்மை விஞ்ஞானி, முனைவர் ஏ.வெண்ணிலா, முதுநிலை விஞ்ஞானி முனைவர் கே.மோகன்ராஜ், மற்றும் பயிர் வினையியல் விஞ்ஞானி முனைவர் வி.கிருஷ்ணப்பிரியா ஆகியோர் மதிப்பெண் பதிவாளர்களாக (score keepers) செயல்பட்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...