கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் இரண்டு நாள் கலை திருவிழா..!

இதில் அரபிக் குத்து பாடலின் பாடகி ஜோனிட்டா காந்தி தனது பாடல் திறமையால் மாணவர்களை மகிழ்வித்தார்.


கோவை: கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் இரண்டு நாள் கலை திருவிழாவான, ஆண்டு விழா 2022- ZERO G வெகு விமர்சையாக 09 Jun 2022 அன்று தொடங்கியது.

Dr. அனுஷா ரவி, முதன்மை செயல் அதிகாரி, பார்க் கல்வி குழுமம் வரவேற்புரை வழங்கினார். 09 Jun 2022 அன்று சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அரபிக் குத்து பாடலின் பாடகி ஜோனிட்டா காந்தி தனது பாடல் திறமையால் மாணவர்களை மகிழ்வித்தார்.



ஜோனிட்டா காந்தி அவர்கள் முதல் முறையாக கோவையில் பங்கேற்று பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது நாளான 10 Jun 2022 அன்று நடிகர் திரு.சதீஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

தனது உரையில் மாணவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தையும், மது அருந்தும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தினார். அதைத் தைரியமாக சொல்வதற்கு காரணம் தான் அதை உபயோகித்ததே இல்லை எனவும் தெரிவித்தார்.



இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜதுரை மாணவர்கள் என்றும் விழிப்புடனும், எதையும் எதிர்கொண்டு வெல்லும் ஆற்றலையும் கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு சிறு கதையின் மூலம் விளக்கிக் கூறினார்.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அதிக சிரத்தையுடன் தங்களது பணிகளைச் செய்யும் பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று விழா இனிதே நிறைவு பெற்றது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...