கோவை அரசு கலைக் கல்லூரியின் 170வது ஆண்டு விழா

கோவை அரசு கலைக் கல்லூரியின் 170வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் காளிராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியின் 170வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் காளிராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



விழாவில், சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கல்லூரியில் கரகாட்டம், சிலம்பம் ஆகியவற்றை மிக சிறப்பாக மாணவ - மாணவிகள் செய்ததாக பாராட்டினார்.



மாநில அளவில் அதிக மாணவர்கள் பயிலும் கல்லூரி பட்டியலில், கோவை அரசு கலைக் கல்லூரி முதலிடத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.



மேலும், கல்லூரி படிப்பை முடித்து சென்றாலும் நாம் பயின்ற கல்லூரி குறித்து பெருமை பட வேண்டும் என தெரிவித்தார். இக்கல்லூரியில், இடவசதி செய்து தருவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.



முன்னதாக, கல்லூரியில் சிறந்து விளங்கும் பல்வேறு துறைகளை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...