தாவர மூலக்கூறு உயிரியல்‌ மற்றும்‌ உயிர்த்‌ தகவலியல்‌ துறை முதுநிலைப்‌ பட்ட மேற்படிப்பு பயிலகத்தின் சிறப்பு விரிவுரை நிகழ்ச்சி!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய உயிரி அறிவியல் மையம் இணைந்து ஆராய்ச்சி, கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து தாவர மூலக்கூறு உயிரியல்‌ மற்றும்‌ தகவலியல்‌ துறை ஆகியவை இணைந்து ஒரு சிறப்பு விரிவுரை நிகழ்ச்சி இன்று நடந்தது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய உயிரி அறிவியல் மையம் இணைந்து ஆராய்ச்சி, கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து தாவர மூலக்கூறு உயிரியல்‌ மற்றும்‌ தகவலியல்‌ துறை ஆகியவை இணைந்து ஒரு சிறப்பு விரிவுரை நிகழ்ச்சி இன்று நடந்தது.



தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோவை மற்றும்‌ தேசிய உயிர்‌ அறிவியல்‌ மையம்‌, பெங்களூரூ இணைந்து கடந்த ஏப்ரல் 29 ஆம் அன்று, ஆராய்ச்சி, கல்வி மற்றும்‌ மனிதவள மேம்பாடு ஆகிய துறைகளில்‌ ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்து இட்டுக்‌ கொண்டது. அதனைத்‌ தொடர்ந்து, 08.06.2022 அன்று முதன்மையர்‌ (முதுநிலைப்‌ பட்ட மேற்படிப்பு பயிலகம்‌) மற்றும்‌ தாவர மூலக்கூறு உயிரியல்‌ மற்றும்‌ தகவலியல்‌ துறை ஆகியவை இணைந்து ஒரு சிறப்பு விரிவுரை ஏற்பாடு செய்தது. அந்த விரிவுரை மூலம்‌ சுமார்‌ 400 இளநிலை, முதுநிலை மற்றும்‌ முனைவர்‌ பட்ட மாணவ - மாணவிகள்‌ பங்கேற்று பயனடைந்தனர்‌.



முனைவர்‌. ரா. ஞானம்‌, பேராசிரியர் மற்றும்‌ தலைவர்‌, வரவேற்புரை வழங்கினார்‌. முனைவர்‌. ந. செந்தில்‌ இயக்குநர்‌ (தாவர முலக்கூறு உயிரியல்‌ மற்றும்‌ உயிர்த்தொழில்நுட்பவியல்‌ மையம்‌ அவைக்கு விருந்தினரை அறிமுகம்‌ செய்தார்‌. முனைவர்‌. ஆர்‌. தமிழ்‌ வேந்தன்‌, பதிவாளர்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, சிறப்பு விரிவுரை மற்றும்‌ ஒன்றிய அரசின்‌ ஆதரவில்‌ நிகழும்‌ “கணினி வழி பயிற்சி - கணினி தொகுப்பு மரபணுவியல்‌” ஆகிய இரு நிகழ்வுகளுக்கு முன்னுரை வழங்கினார்‌. சுமார்‌ 2300 விண்ணப்பத்தாரர்களில, 200 நபர்கள்‌ பயிற்சிக்குத்‌ தேர்ந்தெடுக்கப்பட்டனர்‌.

(முனைவர்‌. இரா. செளதாமினி, தேசிய உயிரி அறிவியல்‌ மையம்‌, பெங்களூரூ, சிறப்பு விரிவுரை வழங்கப்பட்டது. அவர்‌, தனது விரிவுரையில்‌ கிருஷ்ண துளசி, பிரண்டை, முருங்கை மற்றும்‌ சங்குப்‌ பூ ஆகியவற்றில்‌ மரபணு மற்றும்‌ அதனைச்‌ சார்ந்த உயர்‌ தகவலியல்‌ ஆய்வு ஆகியவற்றில்‌ தனது அனுபவங்களைப்‌ பகிர்ந்தார்‌. நம்‌ நல்வாழ்வுக்கான, மருத்துவப்‌ பயிர்களில்‌ உள்ள இரண்டாம்‌ தர மூலக்கூறுகளின்‌ முக்கியத்துவத்தை விளக்கினார்‌. முனைவர்‌. டி. உமா, பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, உயிர்‌ வேதியியல்‌ துறை நன்றியுரை வழங்கினார்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...