தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ உலக உணவு பாதுகாப்பு தினம்‌ 2022!

கோவை: வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உணவு பதன்செய் துறையில் நேற்று உலக உணவு பாதுகாப்பு தினம் நடந்தது.


கோவை: வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உணவு பதன்செய் துறையில் நேற்று உலக உணவு பாதுகாப்பு தினம் நடந்தது.

உலக உணவு பாதுகாப்பு தினம்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்‌கழகத்தில்‌ அமைந்துள்ள வேளாண்மைப்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தின்‌ உணவு பதன்செய்‌ துறையில்‌ நேற்று நடைபெற்றது.

முனைவர்‌ மு.பாலகிருஷ்ணன்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ வரவேற்புரை ஆற்றினார்‌. முனைவர்‌ அ. ரவிராஜ்‌, முதல்வர்‌, வேளாண்மை பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌ தலைமையுரை வழங்கி அதில்‌ உணவு பாதுகாப்பின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, விழிப்புணா்வையும்‌ ஏற்படுத்தினார்‌. சிறப்பு உரை வழங்கிய முனைவர்‌ கிங்ஸ்லி ஆம்புரோஸ்‌, பேராசிரியர்‌, பர்டியூ பல்கலைக்கழகம்‌, அமெரிக்கா ஆய்வகத்தில்‌ உணவு பதப்படுத்துதலின்‌ போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதி முறைகளைப்‌ பற்றி விளக்கினார்‌.

இவ்விழாவில்‌ பேராசிரியர்கள்‌ மற்றும்‌ மாணவர்கள்‌ கலந்துகொண்டனர்‌. இறுதியாக முனைவர்‌ க.குருசாமி, உதவிப்‌ பேராசிரியர்‌ (உயிர்‌ வேதியியல்‌) நன்றியுரை வழங்கினார்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...