DHRUVAA 22: கற்பகம் பொறியியல் கல்லூரியில் நடந்த தேசிய அளவிலான டெக்னிக்கல் சிம்போஸியம், கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சி!

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான டெக்னிக்கல் சிம்போஸியம், கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சி போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான டெக்னிக்கல் சிம்போஸியம், கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சி போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கோவையில்‌ உள்ள கற்பகம்‌ பொறியியல்‌ கல்லூரியில்‌ தேசிய அளவிலான மாணவ மாணவியருக்கான டெக்னிக்கல்‌ சிம்போஸியம், கருத்தரங்கு மற்றும்‌ கலை நிகழ்ச்சிகள்‌ (DHRUVAA 22) கடந்த‌ 3 மற்றும்‌ 4ம்‌ தேதிகளில்‌ நடைபெற்றது.

இந்த விழாவில்‌ நூற்றுக்கும்‌ மேற்பட்ட துறை சார்ந்த டெக்னிக்கல்‌ போட்டிகள்,‌ ஐம்பதிற்கும்‌ மேற்பட்ட கருத்தரங்கு மற்றும்‌ பயிற்சி பட்டறைகள்,‌ ஆறு சாம்பியன்ஷிப்‌ போட்டிகள்‌ மற்றும்‌ 20 வகையான கலை மற்றும்‌ நடனம்‌ சார்ந்த போட்டிகள்‌ நடைபெற்றது. பொறியியல், கலை மற்றும்‌ அறிவியல்‌ மற்றும்‌ மருத்துவம்‌ போன்ற 216 கல்லூரிகளைச்‌ சேர்ந்த சுமார்‌ 3148 மாணவ மாணவியர்கள்‌ கலந்து கொண்டனர்‌.



இந்த விழாவில்‌ ஸ்ரீ நிஷா - விஜய்‌ டிவி சூப்பர்‌ சிங்கர்.‌



சக்தி - குக்கு வித்‌ கோமாளி, விஜய்‌ டிவி - விக்னேஷ்‌ ஆண்டனி, கலக்கப்‌ போவது யாரு9 (KPY9).



அருண், ராஜேஷ்,‌ ஸ்ரீ வைத்தி, நக்கலைட்ஸ்‌ யூடியூப்‌ சேனல்,‌ EMI யூடியூப்‌ சேனல்‌ குழுவினர்‌ மற்றும்‌ கோவை ரேடியோ மிர்ச்சியின்‌ RJ குழுவினர்‌ ஆகியோர்‌ சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்‌.

கல்லூரியின்‌ முதல்வர்‌ டாக்டர்‌.P. விஜயகுமார், கற்பகம்‌ கல்வி நிறுவனங்களின்‌ PRO ஆதி பாண்டியன்‌ மற்றும்‌ சிறப்பு விருந்தினர்கள்‌ போட்டியில்‌ வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி கெளரவித்தார்கள்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...