வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா; 591 மாணவிகள் பட்டங்களை பெற்றனர்

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நான்கு ஆண்டுகளுக்கு பின் இன்று 10 மற்றும் 11 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற 10 மற்றும் 11 ஆம் பட்டமளிப்பு விழாவில், 591 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

மலை பிரதேசமான வால்பாறையில் கல்லூரி இல்லாததால், அங்குள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள், வெளி ஊர்களுக்கு சென்று படிக்கச் வேண்டிய சூழல் நிலவி வந்தது. இதனால், பலரும் பள்ளி படிப்புக்கு மேல் படிக்க வைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 2007 ஆம் ஆண்டு வால்பாறை கல்லூரி தொடங்கப்பட்டது. தற்போதைய, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். முதலில், பாரதியார் பல்கலைக்கழக கல்லூரியாக செயல்பட்ட நிலையில், பின்னர், அரசு கலை கல்லூரியாக மாற்றப்பட்டு, தற்போது வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கொரோனா தொற்று உள்ளிட்ட காரணகளினால் கடந்த நான்கு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்தது.

நான்கு ஆண்டு இடைவெளிக்கு பின்னர், இன்று கல்லூரியின் 10 மற்றும் 11 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.



கல்லூரிக் கல்வி இணை இயக்குனர், முருகவேல் பதிவாளர் பொறுப்பு பாரதியார் பல்கலைக்கழகம், சரவணக்குமார் ஆட்சிக்குழு உறுப்பினர் பாரதியார் பல்கலைக்கழகம், முரளிதரன் முதல்வர் அரசு மகளிர் கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியோர் முன்னிலையில் பட்டமளிப்பு விழாவானது நடைபெற்றது.



இன்று, நடைபெற்ற விழாவில், இளங்கலை மற்றும் முதுகலை என 591 மாணவிகள் பட்டங்களை பெற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற manaca- மாணவியரின், பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பட்டம் பெறுவதை, நெகிழ்ச்சி பொங்க கண்டு மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...