களை மேலாண்மைக்கான ஆராய்ச்சி திட்டத்தின் 29 வது வருடாந்திர ஆய்வு கூட்டம் நிறைவு!

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ களை மேலாண்மைக்கான அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்தின்‌ 29 வது வருடாந்திர ஆய்வுக்கூட்டத்தில் களைக்கொல்லிகளை பயன்படுத்தி மண் வளம் பாதுகாப்பு பற்றி எடுத்துரைக்கப்பட்டது.


கோவை: கோயம்புத்தூர்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ இயங்கக்கூடிய உழவியல்‌ துறையின்‌ கீழ்‌ உள்ள களை மேலாண்மை பிரிவும்‌, ஜபல்புரில்‌ உள்ள இந்திய வேளாண்‌ ஆராய்ச்சி கழகத்தின்‌ களை ஆராய்ச்சி இயக்ககமும்‌ இணைந்து களை மேலாண்மைக்கான அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித்‌ திட்டத்தின்‌ 29வது வருடாந்திர ஆய்வுக்கூட்டம்‌ கடந்த 25 ம் தேதி துவங்கி மூன்று நாட்களாக நடைபெற்றது.

நேற்று (27.05.2022) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்‌ மதிப்பாய்வு விழாவில்‌, களை ஆராய்ச்சி இயக்கத்தின்‌ இயக்குனர்‌ முனைவர்‌ ஜே.எஸ்‌.மிஸ்ரா மற்றும்‌ முனைவர்‌ ஆர்‌.பி.டூபே, புதுடெல்லியில்‌ உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம்‌, வேளாண்‌ வனவியல்‌ மற்றும்‌ கால நிலை மாற்றம்‌ உதவி இயக்குநர்‌ ஜெனரல்‌, முனைவர்‌. பாஸ்கர்‌, தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகம்‌ வேளாண்‌ வணிக மேலாண்மை இயக்குநர்‌ முனைவர்‌ இ.சோமசுந்தரம்,‌ உழவியல்‌ துறை பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ முனைவர்‌. எஸ்‌. பன்னீர்செல்வம்‌, உழவியல்‌ துறையின்‌ இணைப்பேராசிரியர் முனைவர்‌ ப. முரளி அர்த்தனாரி, இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம்‌ மற்றும்‌ தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகத்தின்‌ களை மேலாண்மை விஞ்ஞானிகள்‌ மற்றும்‌ நாட்டின்‌ பல்வேறு பகுதிகளில்‌ இருந்து அகில இந்திய ஒருங்கிணைந்த களை ஆராய்ச்சியின்‌ தலைமை ஆராய்ச்சியாளர்கள்‌ மற்றும்‌ தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகத்தின்‌ விஞ்ஞானிகள்‌, மாணவர்கள்‌ பங்கேற்றனர்‌.



ஆண்டு ஆய்வுக்‌ கூட்டத்தில்‌, வேளாண்‌ வணிக மேலாண்மை இயக்குநர்‌, முனைவர்‌.ஏ. சோமசுந்தரம்‌ அங்கக முறையில்‌ களை மேலாண்மை, இயற்கை வேளாண்மை, வள பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்‌, பல்வகை விதை நுட்பம்‌, களை மேலாண்மைக்கான உயிரி - தொழில்நுட்பக்‌ கருவி மற்றும்‌ களை உரமாக்கல்‌ ஆகியவை ஊட்டச்சத்து பயன்பாட்டுத்‌ திறனை மேம்படுத்துதல்‌, தோட்டக்கலை அடிப்படையிலான களை மேலாண்மையில்‌ களை தாக்குதலை கட்டுப்படுத்த மா இலைகளை வயல்‌ தழைக்கூளமாக பயன்படுத்துதல்‌ பற்றியும்‌ எடுத்துரைத்தார்‌.

ஜபல்பூர்‌ களை ஆராய்ச்சி இயக்கத்தின்‌ தலைமை விஞ்ஞானி மற்றும்‌ பொறுப்பாளர்‌, முனைவர்‌ ஆர்‌.பி.டூபே, நெல்‌ மற்றும்‌ கோதுமை பயிர்‌ முறை மற்றும்‌ மிமிக்ரிகளைகளைக்‌ கட்டுப்படுத்த சுழற்சி முறையில்‌ களைக்கொல்லிகளைப்‌ பயன்படுத்தி மண்‌ வளத்தைப்‌ பாதுகாப்பதன்‌ அவசியத்தை எடுத்துரைத்தார்‌.

ஜபல்பூர்‌, களை ஆராய்ச்சி இயக்கத்தின்‌ இயக்குநர்‌ முனைவர்‌ ஜே.எஸ்‌.மிஸ்ரா, நீர்வாழ்‌ மற்றும்‌ ஒட்டுண்ணி களைகளில்‌ களை மேலாண்மை பற்றி எடுத்துரைத்தார்‌. களை மேலாண்மை நுட்பத்தை தனிப்பயனாக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ களை மேலாண்மை தொழில்நுட்ப மையத்தை அமைக்கும்‌ தேவையை கோடிட்டு காட்டினர்‌. முடிவில்‌, முனைவர்‌ ப. முரளி அர்த்தனாரி, நன்றியுரையுடன்‌ 29 வது வருடாந்திர ஆய்வுக்‌ கூட்டம்‌ நிறைவு பெற்றது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...