கோவையில் இளம் பெண் தொழில்முனைவோருடன் TNAU புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது..!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌ உருவாக்கிய பாக்டீரியா செல்லுலோஸ்‌ ஜெல்‌ தொழில்நுட்பத்தை, தொழில்நுட்ப விநியோகம்‌ செய்யும்‌ பொருட்டு, கோவை லட்சுமி கார்பனைச்‌ சோந்த இளம்‌ பெண்‌ தொழில்‌ முனைவோரான அனித்ரா விஸ்வநாதனுடன்‌ ஒப்பந்தத்தில்‌ இணைந்துள்ளது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழக‌ம் இளம்‌ பெண் தொழில்‌ முனைவோருடன்‌ தொழில்‌ வளர்ச்சிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்‌ இணைந்துள்ளது.



பாக்டீரியா செல்லுலோசுக்கான உலகளாவிய சந்தையானது தோராயமாக 14.8 சதம்‌ கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம்‌ (CAGR) வளரும்‌ என்று எதிர் பார்க்கப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில்‌ பாக்டீரியா செல்லுலோஸின்‌ உலகளாவிய சந்தை வளர்ச்சியானது 250 மில்லியன்‌ அமெரிக்க டாலரிலிருந்து 570 மில்லியன்‌ டாலர்களை எட்டும்‌ என மதிப்பிடப்படுகிறது. பாக்டீரியா செல்லுலோஸ்‌ என்பது செல்லுலோசின்‌ சுத்திகரிக்கப்பட்ட வடிவமாகும்‌.

இது முக்கியமாக 'அசிட்டோபாக்டர்‌' என்னும்‌ பாக்டீரியா இனங்களால்‌ உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பாக்டீரியா செல்லுலோஸ்‌, மக்கும்‌ தன்மை, அதிக போராசிட்டி, சிறந்த நெகிழ்வுத்தன்மை, அதிகநீர்‌ இருப்பு வைத்திருக்கும்‌ திறன்‌, அதிக தூய்மை, உயர்‌ எதிர்ப்பு சிதைவு, சிறந்த படிகத்‌ தன்மை, அதிக பல்‌ பொருளாதல்‌ போன்ற தன்மைகளை கொண்டுள்ளது. மேற்கண்ட சிறப்பியல்பு அம்சங்களுடன்‌, அதிக உயிரி இணக்கத்‌ தன்மையும்‌ உடையதால்‌ இதன்‌ பயன்பாடு பரந்த அளவில்‌ உள்ளது. குறிப்பாக, உயிரியல்‌ மருத்துவம்‌ மற்றும்‌ உயிரி தொழில்நுட்பத்துறைக்கு உகந்ததாக உள்ளது.

மேலும்‌, உணவு மற்றும்‌ உணவு பொதியிடல்‌, நீர்‌ சுத்திகரிப்பு, அழகு சாதனப்‌ பொருட்கள்‌ தயாரிப்பு, காகிதம்‌ தயாரித்தல்‌, உயிரி மருத்துவம்‌, மருந்து விநியோகம்‌ போன்ற பிற துறைகளிலும்‌ பாக்டீரியா செல்லுலோஸின்‌ பயன்பாடு அடங்கும்‌. அவற்றில்‌ நன்கு அறியப்பட்ட தொழில் துறை பயன்பாடுகளான 'நேட்டா-டி-கொக்கோ' முக்கியமானது. இது பிலிபபைன்ஸ்‌ மற்றும்‌ தென்கிழக்கு ஆசிய நாடுகளின்‌ பாரம்பரிய உணவாகும்‌.

மேலும்‌ இது பிற உணவு தொழில்‌ துறைகளான பாரம்பரிய இனிப்பு தயாரிப்பு, குறைந்த கொழுப்பு உணவு தயாரிப்பு மற்றும்‌ பிற சைவ உணவு தயாரிப்புகளிலும்‌ பயன்படுகிறது. இவை மட்டுமன்று, அழகு சாதனப்‌ தயாரிப்பு பொருட்களான முக கவசம்‌, முக ஸ்க்ரபர்கள்‌, தனிப்பட்ட சுத்தபடுத்திகள்‌, கான்டாக்ட்‌ லென்சுகள்‌ தயாரிப்பில்‌ பயன்படுகிறது. மேலும்‌, மருந்து விநியோகத்தில்‌ முக்கிய பயன்பாடுகளான டிரான்ஸ்டர்மல்‌ மருந்து விநியோகம்‌, பல்‌ மருந்து விநியோகம்‌, புரத விநியோகம்‌, திசு ஒட்டுதல்‌ மருந்து விநியோகம்‌ ஆகியவற்றிலும்‌ பாக்டீரியா செல்லுலோஸ்‌ முக்கிய பங்கு வகிக்கிறது.

துணைவேந்தர் முனைவர்‌.வெ. கீதாலெட்சுமி கூறுகையில்‌ இந்த தொழில்நுட்பம்‌ இப்பல்கலைக்கழகத்தில்‌ பயின்று தொழில்‌ துவங்க உள்ள மாணவி அனித்ரா விஸ்வநாதன்‌ கிடைக்க பெற்றது. இப்பல்கலைக்கழகத்திற்கும்‌, நிர்வாகத்திற்கும்‌ மட்டற்ற மகிழ்ச்சி மற்றும்‌ பெருமை சோக்கும்‌ விதமாக உள்ளது எனக்‌ கூறினார்‌.

மேலும்‌ விவசாய தொழில்‌ வளர்ச்சிக்கான இயக்குநர் முனைவர். இ. சோமசுந்தரம்‌‌ கூறுகையில்‌ இத்தொழில்நுட்பம்‌ மூலம்‌ செல்வி. அனித்ரா மேலும்‌ மேலும் வளர்ந்து தொழில்‌ முனைவோராக வரவேண்டும்‌ என வாழ்த்தியதுடன்‌ பல்கலைக்கழகத்தின்‌ மூலம்‌ அனைத்து வகையான தொழில்நுட்ப மற்றும்‌ திட்ட உதவிகள்‌ வழங்க ஆவன செய்யப்படும்‌ எனக்‌ கூறினார்.

மேலும்‌ பல்கலைக்கழக பதிவாளர்‌ முனைவா்‌.ரா. தமிழ்வேந்தன்‌ கூறுகையில்‌ மேலும்‌ பல நுண்ணுயிர்‌ தொழில்நுட்பங்கள்‌ பயனாளிகளுக்கு கொண்டு சேர வேண்டும்‌ எனவும்‌ பல்கலைக்கழக வருவாயை பெருக்கவும்‌ அனைத்து வகையான முயற்சியும்‌ பல்கலைக்கழக விஞ்ஞானிகளால்‌ மேற்கொள்ளப்படும்‌ என தெரிவித்தார்.



இத்தொழில்நுட்பத்தை உருவாக்கிய வேளாண்‌ நுண்ணுயிர் துறை பேராசிரியர் முனைவர்‌. உ.சிவக்குமார்‌ கூறுகையில்‌, தேங்காய்‌ தண்ணா்‌ வீணாவதை தடுப்பதற்கும்‌ மற்றும்‌ இதனை வைத்து பாக்டீரியல்‌ செல்லுலோஸ்‌ எனப்படும்‌ நுண்ணுயிரியை மென்மேலும்‌ வளர்ப்பதற்கும்‌ இது போன்ற தொழில்நுட்பங்கள்‌ உறுதுணையாக இருக்கும்‌ என்றார். இயற்கை வேளாண்மை இயக்குநர் முனைவர். பி.பாலசுப்பிரமணியன்‌ மற்றும்‌ பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குநர் ஆர். ரவீந்திரன்‌ உடன்‌ இருந்தனர்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...