கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு முகாம் நிறைவு!

சென்னை மற்றும் பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக கடந்த 18 ஆம் தேதி தொடங்கிய தேசிய ஒருமைப்பாட்டு முகாம் நேற்று வரை கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.


கோவை: சென்னை மற்றும் பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக, தேசிய ஒருமைப்பாட்டு முகாம் கடந்த மே.18 துவங்கி 24 ஆம் தேதி வரை தமிழ்நாடு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இந்த முகாமில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய 11 மாநிலங்களில் இருந்து சுமார் 250 என்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் மற்றும் 50 என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர்கள் இந்த தேசிய ஒருமைப்பாட்டு முகாமில் பங்கேற்றனர். இதன் நிறைவு விழா நேற்று பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பி. காளிராஜ் அனைத்து என்.எஸ்.எஸ். தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இவ்விழாவில் சென்னை, மண்டல இயக்குநர் சி. சாமுவேல் செல்லையா, பதிவாளர் கே. முருகவேல், மாநில என்.எஸ்.எஸ் அலுவலர் ழ.எம். செந்தில்குமார், பல்கலைக்கழக என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் ரா. அண்ணாதுரை, பேராசிரியர்கள் மணிமேகலன், வசந்த் மற்றும் துறைத் தலைவர்கள் மற்றும் பிற பேராசிரியர்கள், இணைப்புக் கல்லூரி என்.எஸ்.எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், என்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...