கருமத்தம்பட்டியில் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் தேசிய நாட்டு நலப்பணி திட்ட முகாம்!

கோவை கருமத்தம்பட்டியில் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் தேசிய நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெறுகிறது.



கோவை: ஊஞ்சப்பாளையம் கிராமம் கருமத்தம்பட்டியில் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் நேற்று தொடங்கிய தேசிய நாட்டு நலப்பணி (NSS) சிறப்பு முகாம் வரும் 23ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.



முகாமின் தொடக்க விழா நேற்று காலை 12 மணி அளவில் ஊஞ்சப்பாளையம் கிராமம் மாதேஸ்வரன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் மோகன்குமார், மாணவர்களின் பங்கு, கிராம முன்னேற்றம் பற்றி உரையாற்றினார்.



மாணவ மணிகளின் பொது சேவை, சிந்தனை மற்றும் செயல்பாடு குறித்து கல்லூரி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா ரவி சிறப்புரையாற்றினார்.



மேலும் கணியூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி, முன்னாள் தலைவர் நடராஜன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர். விழாவை தேசிய நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் குமரேசன் மற்றும் ராஜாராவி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.



Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...