கோவை கணியூர் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் சங்கம் துவக்க விழா..!

இந்த வேளாண் பொறியியல் துறையின் சங்கம் துவக்க விழாவில் இறுதியாக கல்லூரி வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: கோவை கணியூர் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் சங்கம் துவக்க விழா நடைபெற்றது.

கணியூர் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் சங்கம் துவக்க விழா 05 மற்றும் 06 May 2022 ஆகிய நாட்களில் நடைபெற்றது.



இதன் நிறைவு விழாவில் முனைவர்.ரங்கசாமி, முன்னாள் இயக்குனர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

துவக்க உரையில் பேசிய இக் கல்லூரியின் முதல்வர் முனைவர் மோகன்குமார் "நவீன காலத்தில் வேளாண் துறையின் வளர்ச்சி" பற்றி பேசினார். பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் Dr.அனுஷா ரவி தனது தலைமை உரையில் "பூச்சிக்கொல்லிகளில் இரசாயனத்தின் பயன்பாடு, மனிதர்கள் மற்றும் வேளாண் ஆராய்ச்சியில் அது ஏற்படுத்தும் தாக்கம்" பற்றி பேசினார். சிறப்பு விருந்தினர் முனைவர் ரங்கசாமி "துரிய பண்ணையம் மற்றும் நீர் பாசன முறை" பற்றி சிறப்புரையாற்றினார்.

இதனை தொடர்ந்து ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் ஸ்ரீதர் "இயந்திரவியல் மற்றும் நவீன செயலிகள்" என்ற தலைப்பிலும், RVS பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் ராஜ்குமார் "உணவு பதப்படுத்தும் முறை மற்றும் ஊட்டச்சத்தின் பங்கு மற்றும் அதன் தேவை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தின் விஞ்ஞானி முனைவர். பாலசுப்ரமணியன் "விவசாயத் துறையில் தற்போது இருக்கும் சிக்கல்களையும் அவற்றை களைய நாம் நவீன சாதனங்களை பயன்படுத்தும் முறை" பற்றியும் விளக்க உரை ஆற்றினார்.



இறுதியாக கல்லூரி வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்ற பின், விழா இனிதே நிறைவு பெற்றது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...