தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ இந்தியா லிமிடெட்‌ நிறுவனம் (FMC)‌ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்‌!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஊக்கத் தொகை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, FMC இந்தியா லிமிடெட்‌ நிறுவனத்துடன்‌ இணைந்து, அடிப்படை மற்றும்‌ பயன்பாட்டு ஆராயச்சி மற்றும்‌ ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஊக்கத்‌ தொகை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ மேற்கொண்டது.



இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.கீதாலட்சுமி, பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ பன்னாட்டு நிறுவனங்கள்‌ இணைந்து ஒருங்கிணைந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதால்‌ சிறந்த கண்டுபிடிப்புகளை விவசாயிகளுக்கு வழங்க இயலும்‌ எனறார்‌.



மேலும்‌, சுற்றுச்சூழலுக்கு தகுந்த புதிய வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளை அறிமுகப்படுத்துவது, வேளாண்மையில்‌ எஞ்சிய நச்சுத்தன்மையை குறைத்து சிறந்த லாபத்தினை பெற இயலும்‌ எனறார்‌. மேலும்‌, FMC நிறுவனம்‌ மாணாக்கர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக தங்களுடைய நன்றியை தெரிவித்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல, மாணாக்கர்களுக்கு நிறுவனப்‌ பயிற்சியினையும்‌ வழங்க வேண்டும்‌, என்று கேட்டுகொண்டார்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ பூச்சியியல்‌ துறை தலைவர்‌ முனைவர்‌ கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை வழங்கி எஃப்‌எம்சி இந்தியா மற்றும்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ ஒருங்கிணைந்த ஆராய்ச்சிகளை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதால்‌ ஏற்படும்‌ நன்மைகளைப்‌ பற்றி அடிக்கோடிட்டு காட்டினார்‌.

நூறு ஆண்டுகளாக இயங்கிவரும்‌ இரு நிறுவனங்கள்‌ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்‌ ஈடுபடுவது ஒரு முத்தாய்ப்பான நிகழ்வு எனறு கூறினார்‌.

பயிர் பாதுகாப்பு மையத்தின்‌ இயக்குனர்‌ முனைவர்‌ பிரபாகர்‌ முதலில்‌ பூச்சிகள்‌ துறைக்கு மட்டும்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ ஏற்படுவதாக இருந்தது தற்போது இதில்‌ மேலும்‌ 5 துறைகள்‌ இணைந்து இருப்பது அடிப்படை மற்றும்‌ அதனை சார்ந்த ஆராய்ச்சிகளை அனைத்து துறைகளிலும்‌ மேற்கொள்வதற்கு மிகவும்‌ பேருதவியாக இருக்கும்‌, என்று எடுத்துரைத்தார்‌.

முதுநிலை மற்றும்‌ ஆராய்ச்சி மாணவர்களை ஒவ்வொரு வருடமும்‌ உருவாக்குகிறது என்றும்‌ அந்த மாணவர்களுக்கு சிறந்த முறையில்‌ அனைத்து ஆராய்ச்சிகளை ஆராய்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொள்கிறது என்றும்‌ எஃப்‌எம்சி நிறுவனத்தின்‌ இந்த உதவித்தொகை மாணவர்களை மேலும்‌ ஊக்குவிக்கும்‌ என்று, கூறினார்‌.

எஃப்‌எம்சி இந்தியா நிறுவனம்‌ உலக அளவில்‌ 50 நாடுகளில்‌ இயங்கி வருகிறது என்றும்‌ அதனுடைய நிறுவனத்தின்‌ பொருட்களை 120 நாடுகளில்‌ உபயோகப்படுத்துகிறார்கள்‌ என்றும்‌ கூறினார்‌. மேலும்‌ எஃப்‌எம்ஸ்‌ இந்திய நிறுவனம்‌ மேற்கொண்டு வரும்‌ அனைத்து நிகழ்வுகளைப்‌ பற்றியும்‌ விரிவாக எஃப்‌எம்சி இந்தியா நிறுவனத்தின்‌ இயக்குனர்‌ முனைவர்‌ ரவி அணர்ணா விளக்கினார்.

எஃப்‌எம்சி இந்தியா நிறுவனத்தின்‌ ஆராய்ச்சி இயக்குனர்‌ முனைவர்‌ அனந்தகிருஷ்ணன்‌ எஃப்‌எம்சி நிறுவனம்‌ தனது நிதி ஒதுக்கீட்டில்‌ சுமார்‌ 7 சதவீதத்தை ஆராயச்சி பணிக்காக மட்டும்‌ பயன்படுத்துகிறது என்றும்‌ கடந்த இரண்டு வருடங்களாக இந்நிறுவனம்‌ இந்தியாவில்‌ அதிக அளவிலான புதிய மூலக்கூறுகளை வைத்திருப்பதற்கான சிறந்த விருதினைப்‌ பெற்றுள்ளது என்று எடுத்துரைத்தார்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...