10ம் வகுப்பு பொது தேர்வு: கோவை மாவட்டத்தில் 149 மையங்களில் 41,811 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக நேரடி பொதுத் தேர்வு நடத்தப்படாமல் இருந்த நிலையில், இன்று 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் 149 தேர்வு மையங்கள் தயார்படுத்தப்பட்டு 41,811 மாணவர்கள் பொது தேர்வு எழுதவுள்ளனர்.



கோவை: தமிழகம் முழுவதும் இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நேரடி பொதுத் தேர்வு நடத்தப்படாமல் இருந்த நிலையில், இன்று10-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது.



அதன்படி, கோவை மாவட்டத்தில் 149 தேர்வு மையங்கள் தயார்படுத்தப்பட்டு 41,811மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதவுள்ளனர்.



தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டு, கிருமி நாசினி வழங்கப்படுகிறது.

தேர்வு மையங்களில் மாணவர்களை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படை நியமிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

நாளை பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள

மாணவர்களுக்கு வாழ்த்துகள்!

நீங்கள் கற்றதை மதிப்பிடுபவை தான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல! நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க! என்று மாணவ -மாணவிகளை ஊக்குவித்து அறிவிப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...