கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 2000 மாணவ - மாணவிகள் பங்கேற்கவுள்ள 'களம்' 2022 நிகழ்ச்சி

வரும் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள தேசிய அளவிலான நிகழ்ச்சியில், தமிழகத்தில் உள்ள 140 கல்லூரிகளைச் சேர்ந்த 2000க்கும் அதிகமான மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.


கோவை: கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான முதலாம் ஆண்டு மாணவ மாணவியருக்கான டெக்னிக்கல் சிம்போஸியம், கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சிகள் - களம் 2022 (KALAM 2022) வரும் 6 மற்றும் 7ம் தேதிகளில் நடைபெற்ற உள்ளது.

மாணவ மாணவிகள் தங்கள் துறை சம்பந்தமான திறமைகளை வெளிப்படுவதற்கும், அவர்களது புதிய கண்டுபிடிப்புகளை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்த என பல்வேறு தனிப்பட்ட திறன்களை ஊக்குவிப்பதற்காகவே, ஒவ்வொரு ஆண்டும் "களம்" நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

வரும் 6 மற்றும் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த ஆண்டிற்கான "களம்" நிகழ்ச்சியை கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி. விஜயகுமார் தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவில் தமிழகத்தில் உள்ள 140 கல்லூரிகளைச் சேர்ந்த 2000க்கும் அதிகமான மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ள தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த ஆண்டு "களம்" நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட துறை சார்ந்த டெக்னிக்கல் நிகழ்ச்சிகள், 5 கருத்தரங்குகள், 10 வகையான கலை சார்ந்த போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...