கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தின் சார்பில் பொது கொள்கைக்கான மைய துவக்க விழா..!

குமரகுரு கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தலைவர் அருட்செல்வர், முனைவர் நா.மகாலிங்கத்தின், நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூரும் வண்ணம் இம்மையம் துவங்கப்பட்டது.


கோவை: குமரகுரு பன்முக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நா.மகாலிங்கம் பொதுக் கொள்கைக்கான மையம் (NM CPP) துவங்கப்பட்டது.

குமரகுரு கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தலைவர் அருட்செல்வர், முனைவர் நா.மகாலிங்கம் ஐயா அவர்களின், நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூரும் வண்ணம் இம்மையம் துவங்கப்பட்டது.

இதில் கே.சி.எல்.ஏ.எஸ்., முதல்வர் டாக்டர் விஜிலா கென்னடி வரவேற்புரை நல்கினர். குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணைத்தாளாளர் சங்கர் வாணவராயர் தலைமை வகித்த இந்நிகழ்வில் மாணவர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பொது நலனுக்காக ஒன்றிணைந்து ஒரு கல்வி நிறுவனத்தில் பொதுக் கொள்கை மையத்தை நிறுவுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி உரையாற்றினார்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக, நிதின் பாய், (பெங்களூரு தக்ஷிலா நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநர்) கலந்து கொண்டார். அவர் கூறுகையில், கோவையில் உள்ள தனியார் தொழில்முனைவோர்களால் உருவாக்கப்பட்ட கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, குடிநீர், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள முன்னேற்றத்தையும், கோவையின் தனித்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மாதிரியை குறிப்பிட்டு, இது இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது எனக் கூறினார்.

திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது. NM CPP ஆனது குமரகுரு பன்முக கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் தொடர்புடைய, ஒரு சுதந்திரமான பொதுக் கொள்கை சிந்தனைக் குழுவாகச் செயல்படும்.

வளர்ச்சி, ஆராய்ச்சி, கல்வி மற்றும் மக்களின் நலனுக்காக அரசு மற்றும் கொள்கை ரீதியான முனைப்புடன் பணியாற்றுபவர்களுடன் இணைவதன் மூலம் பொதுக் கொள்கையின் இலக்குகளை அடைவதற்கு இம்மையம் தனது பங்களிப்பினைச் அளிக்கும். இந்த மையம் அரசு, பொதுக் கொள்கை வகுப்பாளர்கள், வல்லுநர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோருடன் இணைந்து வளர்ச்சிக்கான தற்போதைய மற்றும் எதிர்கால செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்து அடையாளம் காணும்.

இந்த மையத்தில் மத்திய, மாநில அரசுத் துறைகள், சிந்தனைக் குழுக்கள், இலாப நோக்கமற்ற நிறுவனங்கள் மற்றும் கல்வி/ஆராய்ச்சி நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன. இதில் தக்ஷஷிலா நிறுவனம், பெங்களூரு, மனித பாதுகாப்பு ஆய்வுகள் மையம், ஹைதராபாத், கோவிண்ட்ஸ், பெங்களூரு, IMPRI, புது தில்லி மற்றும் ராஷ்ட்ரம் பள்ளி ஆகியவை அடங்கும்.

குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின், இளங்கலை (B.A) மற்றும் முதுகலை (M.A) அரசியல் அறிவியல் துறையானது நா.மகாலிங்கம் பொதுக் கொள்கை மையத்துடன் இணைந்து சமூகம் மற்றும் சமுதாயத்தின் சீரிய நலனுக்கான பொதுக் கொள்கைகளில் ஒன்றிணைந்து செயல்படவுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...