தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை., 43-வது பட்டமளிப்பு விழா: இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் பட்டங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை பல்கலை., இணையதள பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.



கோவை: தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் பட்டங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை பல்கலை., இணையதள பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம், என்று தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 43-வது வருடாந்திரப்‌ பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ள நிலையில், கடந்த 31.03.2022 அன்று வரையிலான தேர்வு முடிவுகள்‌ அறிவிக்கப்பட்ட மாணவ மாணவியர்கள் பட்டங்கள்‌ பெறுவதற்கான விண்ணப்பப் படிவம்‌ மற்றும்‌ இதர விவரங்களைத்‌ பல்கலைக்கழகத்தின்‌ இணையதளமான https://tnau.ac.in/ மூலம்‌ 25.04.2022 முதல்‌ பதிவிறக்கம்‌ செய்து விண்ணப்பிக்கலாம்‌.

விணணப்பங்களை https://tnau.ac.in/ இணையதளத்தில்‌ உள்ள இணைப்பு (link) மூலம்‌ ஆன்லைனிலும்‌ சமர்ப்பிக்கலாம்‌. மேலும், விண்ணப்பக் கட்டணத்தை SBI Collect (The Comptroller, TNAU, Coimbatore) என்ற கணக்கில்‌ செலுத்த வேண்டும்‌.

இப்பட்டமளிப்பு விழாவிற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ உரிய இணைப்புகளுடன்‌ (அதாவது தற்காலிக பட்டப்படிப்பு சான்றிதழின்‌ (PC) நகல்‌, இறுதி பருவ மதிப்பெண்‌ சான்றிதழின்‌ நகல்‌ (ஒன்று மட்டும்‌) இணையதளம்‌ மூலமாக வங்கியில்‌ செலுத்தப்பட்ட கட்டணத்திற்கான ரசீது மற்றும்‌ சமீபத்தில்‌ எடுத்த புகைப்படம்‌ (2nos.) 18.06.2022-ம்‌ தேதி மாலை 5 மணிக்குள்‌ பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர வேணடும்‌.

மேலும்‌, இதுசம்பந்தமான விவரங்கள்‌ அறிய விரும்புவோர்‌ 0422-6611506 என்ற தொலைபேசி எண்ணில்‌ தொடர்பு கொள்ளலாம்", என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...