கோவை கற்பகம்‌ தொழில்நுட்பக்‌ கல்லூரியின் 10 மற்றும்‌ 11வது பட்டமளிப்பு விழா..!

இந்த விழாவில் 2015 - 2019, 2016 - 2020ம்‌ கல்வி ஆண்டில்‌ பயின்ற 337 மாணவர்களுக்கு பட்டங்கள்‌ வழங்கப்பட்டது.


கோவை: கோவை கற்பகம்‌ தொழில்நுட்பக்‌ கல்லூரியின் 10 மற்றும்‌ 11வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கோவை கற்பகம்‌ தொழில்நுட்பக்‌ கல்லூரி 10 மற்றும்‌ 11வது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில்‌ மிகச்சிறப்பாக 02.04.2022 இன்று நடைபெற்றது. இதில்‌ 2015 - 2019, 2016 - 2020ம்‌ கல்வி ஆண்டில்‌ பயின்ற 337 மாணவர்களுக்கு பட்டங்கள்‌ வழங்கப்பட்டது.



இந்தப்‌ பட்டமளிப்பு விழாவிற்கு கற்பகம்‌ கல்வி நிறுவனங்களின்‌ தலைவர்‌ முனைவர்‌. இரா.வசந்தகுமார்‌ தலைமை தாங்கினார்‌. கல்லூரியின்‌ முதல்வர்‌ ஆண்டறிக்கை வாசித்தார்‌.



பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முன்னாள்‌ காவல்துறை இயக்குநர்‌ S. R. ஜாங்கிட்‌ IPS கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.



அவர்‌ தனது உரையில்‌ இன்றைய மாணவர்கள்‌ கல்வியையும், ஒழுக்கத்தையும்‌ இரு கண்களாகக்‌ கருத வேண்டும்‌ என்று கூறினார்‌.

மேலும்‌, இந்திய அரசாங்கம்‌ நடத்துகின்ற IAS, IPS போன்ற போட்டித் தேர்வுகளில்‌ ஆர்வத்தோடு பங்கேற்று நாட்டுக்கு சேவை செய்திட வேண்டும்‌ என்று கேட்டுக்கொண்டார்‌.

மேலும்‌, அவர்‌ தனது உரையில்‌ இந்திய மாணவர்கள்‌ எதையும்‌ சாதிக்கும்‌ வல்லமை கொண்டவர்கள்‌ என்றும்‌ அறிவியல்‌, தகவல்‌ தொழில்நுட்பம்‌, இயந்திரவியல்‌ போன்ற பல்வேறு துறைகளில்‌ நம்‌ நாடு மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குவதாக கூறினார்‌.



இன்று பட்டம்‌ பெறும்‌ மாணவர்கள்‌ நாட்டுக்கும்‌, சமூகத்திற்கும்‌ நல்ல எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்‌ என்று சிறப்பு விருந்தினர்‌ தனது வாழ்த்துக்களைத்‌ தெரிவித்துக்‌ கொண்டார்‌.



இந்த விழாவில்‌ கற்பகம்‌ கல்வி நிறுவனங்களின்‌ அறங்காவலர்கள்‌ வ.தமயந்தி, வி.கார்த்திக்‌, முதன்மை செயல்‌ அலுவலர்‌ முருகையா, கற்பகம்‌ தொழில்நுட்பக்‌ கல்லூரியின்‌ துணைமுதல்வர் முனைவர்‌.பானு, துறைத்தலைவர்கள்‌, பேராசிரியர்கள்‌, பட்டம்‌ பெற்றவர்களின்‌ பெற்றோர்கள்‌ மற்றும்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...