கோவை கற்பகம் உயர் கல்விக்கழகத்தில் இலக்கியங்களில் மண்-மரபும்-மானுடம் என்னும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கம்..!

இந்த கருத்தரங்கம், 28.03.2022 திங்கள்கிழமை அன்று காலை 11.30 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.


கோவை: கோவை கற்பகம் உயர்கல்விக்கழக, மொழிகள்துறை தமிழ்ப்பிரிவின் சார்பில், இலக்கியங்களில் மண்-மரபும்-மானுடம் என்னும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் 28.03.2022 திங்கள்கிழமை அன்று காலை 11.30 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மொழிகள் துறை தமிழ்ப்பிரிவின் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.மதன்குமார் வரவேற்புரை நல்கினார். மேலும், கற்பகம் உயர்கல்விக்கழக கலை அறிவியல் மற்றும் மானுடவியல் புல முதன்மையர் முனைவர் நா.வெ.பாலாஜி தமது வாழ்த்துரையை வழங்கினார்.



முதன்மையர், மாணவர் நலன், பேராசிரியர் முனைவர் ப.தமிழரசி வருகை புரிந்து தலைமையுரை வழங்கினார். அவ்வுரையில் இலக்கியம் என்பது பண்பாட்டின் அடையாளம் என்றும், மண், மரபு பற்றிய விளக்கத்தினையும், நமது மரபு உலகளவில் எவ்வாறு மானுடமாக விரிந்துள்ளது என்பது பற்றியும் தமது உரையின் மூலம் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக, தில்லி பல்கலைக்கழகத்தின் நவீன, இந்திய மொழிகள் மற்றும் இலக்கியத்துறையின் பேராசிரியர் முனைவர் தி.உமாதேவி சிறப்புரையாற்றினார்.

தமது உரையில் கடையேழு வள்ளல்கள், கர்ணன் போன்ற கொடையாளிகளின் கொடைத்திறன்கள் மண்ணின் அடையாளமாகவும், மரபாகவும் உள்ளது. இக்கொடைத்திறன் மானுடத்தின் தனித்தன்மையாகவும் உள்ளது என்று தம் கருத்தை முன்வைத்தார்.

விழாவின் நிறைவாக கற்பகம் உயர்கல்விக்கழக, மொழிகள் துறையின் தமிழ்ப்பிரிவின் இணைப்பேராசிரியர் முனைவர் பா. உமாராணி நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...