கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்‌ முதுநிலைப்பட்ட மேற்படிப்பு பயிலக கணினி மென்பொருள்‌ பயன்பாடு துவக்கவிழா..!

இந்த மென்பொருள், மாணவர்களின்‌ சான்றிதழ்கள் மற்றும்‌ முக்கிய கோப்புகள்‌ பாதுகாக்கப்பட்டு சேமித்து, தேவைப்படும்‌ பொழுது அதிக சிரத்தை இன்றி எடுக்கவும் உதவும்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பலகலைக்கழகத்தில்‌ முதுநிலைப்பட்ட மேற்படிப்பு பயிலக கணினி மென்பொருள்‌ பயன்பாடு துவக்கவிழா நடைபெற்றது.



தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌, துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ. கீதாலட்சுமி, முதுநிலைப்பட்ட மேற்படிப்பு பயிலகம்‌ செயல்பாடுகளை கணினிமயமாக்கும்‌ நோக்கத்துடன்‌ உருவாக்கப்பட்ட மென்பொருள்‌ பயன்பாட்டினை இன்று (29.03.2022) துவக்கி வைத்தார்‌.

இந்த மென்பொருள்‌ பயன்பாட்டின்‌ மூலம்‌ மாணவர்களின்‌ சான்றிதழ்கள் மற்றும்‌ முக்கிய கோப்புகள்‌ பாதுகாக்கப்பட்டு சேமிக்கப்படுவதுடன்‌ தேவைப்படும்‌ பொழுது அதிக சிரத்தை இன்றி எடுப்பதற்கு வசதியாக அமையும்‌.



மேலும்‌, இந்த மென்பொருள்‌ பயன்பாட்டின்‌ மூலம்‌ காகிதம்‌ இல்லாத தொடர்புகளுக்கும்‌ வழிவகை செய்கிறது. இந்த துவக்க நிகழ்வில்‌ முதுநிலைப்பட்ட மேற்படிப்பு பயிலக முதன்மையர்‌ முனைவர்‌. ஜே.எஸ்‌. கென்னடி, உடனிருந்தார்‌.

மேலும், இதர துறைத் தலைவர்கள்‌, பேராசிரியர்கள்‌ மற்றும்‌ மாணவர்கள்‌ இணைய வழியில்‌ பங்கேற்றார்கள்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...