கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக முதலாமாண்டு இளநிலை (2021-22) வகுப்புகள்‌ தொடங்கும்‌ நாள்‌ அறிவிப்பு..!

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ கீழ்‌ இயங்கி வரும்‌ உறுப்பு மற்றும்‌ இணைப்புக்‌ கல்லூரிகளை ஏப்ரல்‌ 18, 2022 அன்று திறக்க பல்கலைக்கழகம்‌ முடிவு.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக முதலாமாண்டு இளநிலை (2021-22) வகுப்புகள்‌ தொடங்கும்‌ நாள்‌ பற்றிய விபரம்‌ வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ இளமறிவியல்‌ பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு (2021-2022) 23.02.2022 முதல்‌ நடத்தப்பட்டது. நகர்வு முறையில்‌ இடங்களை நிரப்பும்‌ பணியும்‌ இணையாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இளமறிவியல்‌ பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வை (2021-2022) இந்த மாத இறுதிக்குள்‌ முடிக்க பல்கலைக்கழகம்‌ திட்டமிட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ கீழ்‌ இயங்கி வரும்‌ உறுப்பு மற்றும்‌ இணைப்புக்‌ கல்லூரிகளை ஏப்ரல்‌ 18, 2022 அன்று திறக்க பல்கலைக்கழகம்‌ முடிவு செய்துள்ளது.

இட ஒதுக்கீடு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி தொடங்கும்‌ நாளை முன்கூட்டியே தெரிவிப்பதின்‌ வாயிலாக, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளுக்கு அவர்களின்‌ பயணத்தைத்‌ திட்டமிட முடியும்‌ என்று முனைவர்‌. மா. கல்யாணசுந்தரம்‌ முதன்மையர்‌ மற்றும்‌ தலைவர்‌ (மாணவர்‌ சேர்க்கை) தெரிவித்தார்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...