பேராசிரியர்களின் ஆய்வு மனப்பான்மையை ஊக்குவிக்கின்ற வகையில் கற்பகம் ஆய்வு நாள் விழா – 2022

இவ்விழாவில் பேராசிரியர்களின் ஆய்வு நூல் வெளியீடுகள், ஆய்வுக்கட்டுரை வெளியீடுகள், திட்டப்பணிகள், காப்புரிமைகள் முதலான ஆய்வுப் பங்களிப்புகளுக்குப் பணப்பரிசுடன் கூடிய பாராட்டும் வழங்கப்பட்டன.


கோவை: கற்பகம் உயர் கல்விக்கழகத்தில் பேராசிரியர்களின் ஆய்வு மனப்பான்மையை ஊக்குவிக்கின்ற வகையில், ஆய்வு நாள்-2022-ஆனது பல்கலைக்கழக வளாகத்தில் 26.2.2022, சனி அன்று கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் பேராசிரியர்களின் ஆய்வு நூல் வெளியீடுகள், ஆய்வுக்கட்டுரை வெளியீடுகள், திட்டப்பணிகள், காப்புரிமைகள் முதலான ஆய்வுப் பங்களிப்புகளுக்குப் பணப்பரிசுடன் கூடிய பாராட்டும் வழங்கப்பட்டன. சிறந்த ஆய்வுப்பங்களிப்புக்கான சிறந்த துறைக்குரிய விருதினை கலை, அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் உயிரித் தொழில்நுட்பவியல் துறை வென்றது.

பதிவாளர் முனைவர் மு.பழனிச்சாமி, துணைவேந்தர் முனைவர் சேது.சுடலைமுத்து மற்றும் தேர்வாணையர் முனைவர் ப.பழனிவேலு ஆகியோர் விழாவில் முன்னிலை வகித்தனர். கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர் இராச.வசந்தகுமார் விழாவில் தலைமையுரை வழங்கினார்.



பேராசிரியர்கள், இன்றைய ஒருங்கிணைந்த கணினித் தொழில்நுட்பங்களுடன் இணைந்து புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிய முயலவேண்டும்; ஆய்வுக் கண்டுபிடிப்புகள் என்றும் சமுதாயப் பயன்பாடு மிக்கவையாக அமையவேண்டும்; மாணவர்கள் பாடத்திட்டத்தையும் கடந்து, ஆய்வு நோக்கில் புதியவற்றைச் சிந்திக்கப் பேராசிரியர்கள் தொடர்ந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

மேலும் பேராசிரியர்கள் உலகத் தரத்துக்கு இணையான ஆய்வுசார் கட்டமைப்புகளைக் கொண்டு சிறந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும், கண்டுபிடிப்புகளை உற்பத்திப் பொருள்களாக்கி சந்தைப்படுத்துகிற தொழில் முனைவோர்கள் என்கிற நிலைக்கு உயரவும், அனைத்து நிலைகளிலும் கற்பகம் உயர் கல்விக்கழகம் தொழில்நுட்ப உதவிகளைச் செய்யக் காத்திருப்பதாகக் கூறினார்.



கற்பகம் கல்விக்குழுமங்களின் அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களும், புல முதன்மையர்களும், பேராசிரியர்களும் விழாவில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். உள்தரக் கட்டுப்பாட்டுப் பிரிவின் இயக்குநர் முனைவர் சு.இரவி நன்றி கூறினார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...