கோவையில்‌ நடைப்பெற்ற அறிவியல்‌ தொழில்‌ நுட்ப திருவிழா நிறைவு

இந்த ஒரு வார கால அறிவியல்‌ திருவிழாவில்‌ 7000-த்திற்கு மேற்பட்ட பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணாக்கர்கள்‌ மற்றும்‌ பொது மக்கள்‌ கலந்து கொண்டனர்‌.


கோவை: தமிழகத்தில் கோவை, சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அறிவியல் திருவிழா நடைபெற்றது.

நமது நாடு சுதந்திரம்‌ அடைந்து 75-ஆண்டுகள்‌ ஆன நிலையில்‌, இந்திய அரசின்‌ அறிவியல்‌ தொழில்நுட்ப துறையின்‌ விஞ்ஞான‌ பிரசார் அமைப்பு, தேசிய அறிவியல்‌ தினமான பிப்ரவரி, 28-சிறப்பாகக் கொண்டாடும்‌ வகையில்‌, நாட்டின்‌ 75-முக்கிய நகரங்களைத் தேர்வு செய்து, பிப்ரவரி, 22-முதல்‌ 28- வரை, ஒரு வாரக் காலத்திற்கு, அறிவியல்‌ தொழில்‌ நுட்ப திருவிழா நடத்திட முடிவு செய்து, அதன்‌ தொடர்பாகத் தமிழகத்தில்‌ கோவை, சென்னை, திருச்சி, மதுரை மற்றும்‌ திருநெல்வேலி ஆகிய கூடங்களில்‌ அறிவியல்‌ திருவிழா நடைபெற்றது.

கோவையில்‌, மண்டல அறிவியல்‌ மையத்தில்‌ அறிவியல்‌ திருவிழாவின்‌ துவக்க விழாவை 22, பிப்ரவரி, 2022-அன்று முனைவர்‌. பி.நாகராஜன்‌, முதன்மை விஞ்ஞானி, வன மரபியல்‌ மற்றும்‌ மரம்‌ வளர்ப்பு நிலையம்‌, சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ காலநிலை மாற்றத்‌ துறை, இந்திய அரசு, கோயம்புத்தூர்‌ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அறிவியல்‌ திருவிழாவைத் துவக்கி வைத்து மாணக்கர்களிகடையே அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார்கள்‌.

இந்த அறிவியல்‌ திருவிழாவானது கோவை மண்டலத்தில்‌, மண்டல‌ அறிவியல்‌ மையம்‌, வானவியல்‌ மன்றம்‌, உடுமலை - கலிலியோ அறிவியல்‌ மன்றம்‌, SNMU கல்லூரி அறிவியல்‌ மன்றம்‌, திருப்பூர்‌, பொள்ளாச்சி, உடுமலை மற்றும்‌ கருமத்தம்பட்டி உள்பட 10-இடங்களில்‌ நடைபெற்றது. இந்த ஒரு வார கால அறிவியல்‌ திருவிழாவில்‌ 7000-த்திற்கு மேற்பட்ட பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணாக்கர்கள்‌ மற்றும்‌ பொது மக்கள்‌ கலந்து கொண்டனர்‌. இதன்‌ நிறைவு விழா 28.02.2022 அன்று காலை 10:30 மணியளவில்‌ மண்டல அறிவியல்‌ மையம்‌, கோயம்புத்தூரில்‌ நடைபெற்றது.

நிறைவு விழாவில்‌ சிறப்பு விருந்தினராக முனைவர்‌.மீனாட்சி கணேசன்‌ தலைமை விஞ்ஞானி, இந்தியா தர நிர்ணய அமைவனம்‌ / நுகர்வோர்‌ விவகாரம்‌ உணவு மற்றும்‌ பொது விநியோகத்‌ துறை, இந்தியா அரசு, கோயம்புத்தூர்‌ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணாக்கர்களுக்காக செயல்படுத்தி கொண்டு வரும்‌ பலதரப்பட்ட நிகழ்வுகளை எடுத்துரைத்தார்கள்‌. அறிவியல்‌ கண்ணோட்டம்‌ தர நிர்ணயமாக்குதலில்‌ எங்ஙனம்‌ முக்கியத்துவம்‌ வாய்ந்தது என்பதை விளக்கி மாணாக்கர்களை அறிவியல்‌ துறையில்‌ சிறந்து விளங்க ஊக்கப்படுத்தினார்கள்‌.



மேலும்‌, மண்டல அறிவியல்‌ மையம்‌, கோயம்புத்தூரில்‌, பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணாக்கர்களுக்காக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, ஓவியப்‌ போட்டி, கவிதை போட்டி மற்றும்‌ நாடகப்‌ போட்டி போன்றவற்றில்‌ கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள்‌ மற்றும்‌ சான்றிதழ்கள்‌ வழங்கி சிறப்பித்தார்கள்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...