தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு தொடக்கம்

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ இளமறிவியல்‌ பட்டப்படிப்புகளுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கு நேரடி கலந்தாய்வு பல்கலைக்கழக வளாகத்தில்‌ இன்று நடைபெற்றது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ இளமறிவியல்‌ பட்டப்படிப்புகளுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கு நேரடி கலந்தாய்வு பல்கலைக்கழக வளாகத்தில்‌ இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ இளமறிவியல்‌ பட்டப்படிப்புகளுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கு நேரடி கலந்தாய்வு பல்கலைக்கழக வளாகத்தில்‌ இன்று (23.02.2022) நடைபெற்றது என்று முதன்மையர்‌ (வேளாண்மை) மற்றும்‌ மாணவர்‌ சேர்க்கை தலைவர்‌ மா.கல்யாணசுந்தரம்‌ தெரிவித்தார்‌. பல்கலைக்கழக அதிகாரிகள்‌ கலந்துகொண்டு கலந்தாய்வில்‌ பங்கு பெற்றவர்களை வாழ்த்தினர்‌.



இதில்‌ முன்னாள்‌ இராணுவத்தினரின்‌ வாரிசுகளுக்கான கலந்தாய்வில்‌ D.சசி, S.R.ஆர்த்தி, J.சுப்ரியா ஆகியோர்‌ முதல்‌ மூன்று இடத்தைப்‌ பிடித்தனர்‌.

C.சந்தோஷ்‌, M.லிங்கேஸ்வரன்‌, R.யோகராஜ்‌ ஆகியோர்‌ மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில்‌ முதல்‌ மூன்று இடங்களையும்‌, K.ஷிவானி J.முஹம்மது சாத்‌, S.சிந்தியா ஆகியோர்‌ விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில்‌ முதல்‌ மூன்று இடங்களையும்‌ பெற்று, மாணவர்‌ சேர்க்கை கடிதத்தைப் பெற்றுக்கொண்டனர்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...