கிணத்துக்கடவு பகுதியில் 4-அரசு பள்ளிகளில் நவீன வகுப்பறைகள் தொடக்கம்

ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி சார்பில் கிணத்துக்கடவு பகுதியில் 4-அரசு பள்ளிகளில் நவீன வகுப்பறைகள் தொடக்க விழா நடைபெற்றது.


கோவை: ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி சார்பில் கிணத்துக்கடவு பகுதியில் 4-அரசு பள்ளிகளில் நவீன வகுப்பறைகள் தொடக்க விழா நடைபெற்றது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் உன்னத் பார்த் அபியான் திட்டத்திற்கு தேசிய அளவிலான பொறியியல் கல்லூரிகளில் கோவை கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கிணத்துக்கடவு பகுதியில் உள்ள வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மன்றாம்பாளையம் தொடக்கப்பள்ளி,குருநெல்லிபாளையம் தொடக்கப்பள்ளி, கொண்டம்பட்டி நடுநிலை பள்ளிகளுக்கு எல்சிடி ப்ரொஜெக்டர், இணைய வசதியுடன் கூடிய கணினி, வகுப்பறைகள் சீரமைத்தல், அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வகுப்பறைகள் தொடக்க விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் பாலாஜி தலைமை தாங்கினார். முனைவர் சிவக்குமார், கிணத்துக்கடவு வட்டார கல்வி அலுவலர் காளிமுத்து,மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு துறைத்தலைவர் முனைவர் கருப்புசாமி வரவேற்றுப் பேசினார்.

விழாவில் ஸ்மார்ட் வகுப்பறையை ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி இயக்குனர் ராஜாராம் திறந்து வைத்து ஸ்மார்ட் வகுப்பறைகளாக ஆவணங்களைப் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கி பேசியதாவது:- மாணவர்களின் கற்பனைத் திறனை அதிகரிக்கவும், மாணவர்களுக்கு அறிவுத்திறன் மேம்படவும், இணையதளத்தின் மூலம் நேரடியாக அகில உலக கண்டுபிடிப்புகளையும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும், ஆசிரியர்கள் உபகரணங்களை இயக்குவதற்கான பயிற்சியும் ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களால் வழங்கப்பட்டது.

மேலும் பள்ளிகளில் பசுமைப்படை மாற்றுவதற்கு மரங்களைப் பெருமளவில் வளர்ப்பதற்கான ஆலோசனையும் நடத்தப்பட்டது என்று பேசினார். இந்தகொரோனா தொற்று நோய் காலத்தில் அதன் பின்னரும் ஸ்மார்ட் வகுப்புகள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், துறை பேராசிரியர்கள் முனைவர் சுரேஷ்குமார், முனைவர் சண்முகசுந்தரம், முனைவர் சுரேஷ், முனைவர் சுபா முனைவர் சுகுமார், சிவா அன்பரசு பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...