கோவை அவினாசிலிங்கம் கல்லூரி மாநில தரவரிசையில் ஐந்தாமிடம் பெற்று சாதனை

கோவை அவினாசிலிங்கம் கல்லூரி ஏ.ஆர்.ஐ.ஐ.ஏ தரவரிசையில், மாநில பல்கலைக்கழகம் மற்றும் அரசு உதவி பெறும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கீழ், அடல் தரவரிசையில் ஐந்தாவது தர வரிசையை பிடித்துள்ளது.


கோவை: கோவை அவினாசிலிங்கம் கல்லூரி ஏ.ஆர்.ஐ.ஐ.ஏ தரவரிசையில், மாநில பல்கலைக்கழகம் மற்றும் அரசு உதவிபெறும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கீழ், அடல் தரவரிசையில் ஐந்தாவது தர வரிசையை பிடித்துள்ளது.

கோவை, வடகோவை பகுதியில் உள்ள, அவினாசிலிங்கம் பல்கலைக்கழகமானது, பெண்களுக்கான உயர் கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது.

இந்த கல்லூரியானது, பெண்களுக்காகவே செயல்பட்டு வருகின்றது. இங்கு, சுமார் 5000 த்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இக்கல்லூரியில், பல்வேறு வசதி, வாய்ப்புகளை உண்டாக்கி, பெண்களுக்கான அதிகாரத்தை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், இந்த கல்லூரியானது, ஏ.ஆர்.ஐ.ஐ.ஏ தரவரிசையில், மாநில பல்கலைக்கழகம் மற்றும் அரசு, உதவி பெறும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கீழ், இந்த பல்கலைக்கழகம், அடல் தரவரிசையில் ஐந்தாவது தர வரிசையை, பிடித்துள்ளது.

இந்த அங்கீகாரமானது, பெண்களுக்கு சம உரிமை, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கல்லூரி, ஆற்றிவரும் சேவைக்கான தகுதியான அங்கீகாரமாக கருதப்படுகின்றது.

இதனை கல்லூரி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவிநாசிலிங்கம் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மீனாட்சி சுந்தரம், பேராசிரியர் எஸ்.பி.தியாகராஜன், துணைவேந்தர் டாக்டர்.வி.பாரதி ஹரிசங்கர், பதிவாளர் டாக்டர்.எஸ். கௌசல்யா, நிர்வாக உறுப்பினர்கள், அறங்காவலர்கள், டீன்கள், தலைமை ஆசிரியர்கள் அனைவரும், மாணவிகளுக்கு இதன் மூலமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...