கோவை கிணத்துக்கடவு ஶ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!

பவான் சைபர்டெக் தலைமை வடிவமைப்பு அதிகாரி ராஜசேகரன் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கி உரை நிகழ்த்தினார்.


கோவை: கோவை அருகே உள்ள ஶ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் 2019ம் ஆண்டு பொறியியல் கல்லூரியில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் இன்று நடைபெற்றது.



2019ம் ஆண்டு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற 505 மாணவ-மாணவிகளுக்கு முதல் கட்டமாக பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு ஶ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி தலைவர் ஆர். மோகன்ராம் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் ஆர். ராஜாராம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சுதா மோகன்ராம் பட்டமளிப்பு விழா அறிக்கையை வாசித்தார்.

இந்த விழாவில் பவான் சைபர்டெக் தலைமை வடிவமைப்பு அதிகாரி ராஜசேகரன் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:-

வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கம் இருக்கும். குடும்பம், நண்பர்கள், வேலையிடத்தில் என அனைத்து இடங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் வரும். ஆனால் அவை கடந்து செல்லும் என்கிற நம்பிக்கையை வைத்திருக்கவேண்டும்.

உங்களுக்கு வாழ்க்கையில் குறிக்கோள் இருக்க வேண்டும். அதை அடைய உங்களது முயற்சிகள் இருக்க வேண்டும். முயற்சி செய்து கொண்டிருந்தால் உங்களுடைய இலக்கை எளிதில் அடைய முடியும். மாணவர்கள் மேலும் வாழ்க்கையில் முன்னேற தங்களது அறிவு மற்றும் திறனைத் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், விழாவில் ஶ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி தொழில் துறை நல்லுறவு இயக்குனர் கண்ணன் நரசிம்மன், ஆராய்ச்சித்துறை தலைவர் கருப்புசாமி மற்றும் துறை பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...