கோவை ராமலிங்கம் கூட்டுறவு நிலையத்தில் மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்புகள் துவக்கம்.!!

ராமலிங்கம் கூட்டுறவு நிலையத்தில் மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளதில் 561-பேர் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.


கோவை: ராமலிங்கம் கூட்டுறவு நிலையத்தில் மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளதில் 561-பேர் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2021-22ம் ஆண்டுக்கான முழு நேர மேலாண்மை கூட்டுறவு பட்டய பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.



இந்த பயிற்சி வகுப்பைக் கோவை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

அப்போது துணைப்பதிவாளர் கிருஷ்ணன், ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர். இப்பயிற்சியில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி, கணினி பயிற்சி, நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சி ஆகிய பயிற்சிகள் கற்றுத்தரப்படும்.

அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும். 561-பேர் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர். 36-வாரம் பயிற்சி காலம் ஆகும். காலை மற்றும் மதியம் என இரண்டு பரிவுகளாக இந்த பயிற்சி வகுப்பு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...