பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல்: நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அசத்தல்.!!

பொறியியல் படிப்பில் சேர மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மாநில அளவில் 2, 3 மற்றும் 5ம் இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.


திருப்பூர்: பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மாநில அளவில் 2, 3 மற்றும் 5ம் இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை இணையத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்.

இதில் 13-மாணவர்கள் முழு மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளனர். முன்னதாகப் பொறியியல் படிப்புகளில் சேர 1-லட்சத்து 74-ஆயிரத்து 930-மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1-லட்சத்து 45-ஆயிரத்து 45-மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி இருந்தனர். நடப்பாண்டில், 1-லட்சத்து 39-ஆயிரத்து 33-பேரிடம் இருந்து தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில், 87-ஆயிரத்து 291-பேர் மாணவர்கள். 51-ஆயிரத்து 730-பேர் மாணவிகள். மூன்றாம் பாலினத்தவர் 12-பேர் ஆவர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது.

இந்தப் பட்டியலில் 13-மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று, முதலிடத்தைப் பெற்றுள்ளனர். இதில், திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மூவர் முதல் 5-இடங்களில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

எம்பிசி பிரிவில் மாணவர்கள் பார்த்திபன், திருமுருகன், லோகநாதன் ஆகியோர் முறையே 2, 3, 5ம் இடங்களைப் பிடித்தனர். பிசி பிரிவில் செல்வகுமார் 120-வது இடமும், எஸ்.சி(ஏ) பிரிவில் சந்துரு 84-ம் இடமும் பிடித்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி கூறுகையில், சாதாரண பின்புலத்திலிருந்து இந்த மாணவர்கள் இந்த உயரத்தை எட்டி உள்ளனர். பலரது குடும்பம், திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வருபவர்கள்.

இந்நிலையில், திருப்பூர் அரசுப் பள்ளிகளிலிருந்து முதல் முறையாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த மாணவர்கள் தேர்வாக உள்ளனர். அடுத்து வரும் ஆண்டுகளில் அண்ணா பல்கலையில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...