கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்..!

கோவை: கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நடைபெற்று வருகின்ற நிலையில், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 2021 - 2022ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மாணவர்களின் பள்ளிப்படிப்பு பாதிக்காத வகையில் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலமாகவும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடபட்டிருப்பதால், அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் 2021-2022 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 1ஆம் வகுப்பு வரையான மாணவர் சேர்க்கை நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை புதிதாக ஆறாம் வகுப்பில் 30 பேரும், 11ஆம் வகுப்பில் 171 பேருமாக மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பதாக அரசுப் பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் சேர்க்க பெற்றோர்களும், மாணவர்களும் ஆர்வம் காட்டி வருவதாகவும் ஆசிரியர் மத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...