தமிழகம் முழுவதும் செய்முறைத் தேர்வுக்கு தயாராகும் 11, 12-ம் வகுப்பு மாணவர்கள்: ஆய்வகங்களைப் பரிசோதிக்க பள்ளிகளுக்கு உத்தரவு!

கோவை: தமிழகம் முழுவதும் செய்முறைத் தேர்வுக்கு 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இதையடுத்து ஆய்வகங்களைப் பரிசோதிக்க பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


கோவை: தமிழகம் முழுவதும் செய்முறைத் தேர்வுக்கு 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இதையடுத்து ஆய்வகங்களைப் பரிசோதிக்க பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் மே மாதம் 3-ந்தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் துவங்கி 21-ம் தேதி வரை நடக்கிறது. இதற்கிடையே மாணவ - மாணவிகள் செய்முறைத் தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். இதையடுத்து மூடப்பட்டுக் கிடந்த ஆய்வகங்களை உடனடியாக பரிசோதிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் செய்முறை பொதுத்தேர்வு நடத்த ஆய்வகங்களின் நிலையை பரிசோதித்து தயார் நிலையில் வைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாத இறுதியில், செய்முறை பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளதால், செய்முறைத் தேர்வுக்கான பயிற்சி முன்கூட்டியே அளிக்கப்பட வேண்டும் என்பதால் பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களின் நிலையை சரிபார்த்து, அறிக்கை சமர்ப்பிக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...