கோவை மாநகராட்சிக்குட்பட்ட 15 அரசு பள்ளிகளுக்கு இணையவழி கல்வி வசதி ஏற்பாடு

கோவை: கோவை மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துடன் அறம் அறக்கட்டளை இணைந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் தலைமையில் 15 அரசு பள்ளிகளுக்கு எச்.சி.எல்.எப் அறக்கட்டளை அளிக்கும் நிதியின் மூலம் இணையவழி கல்வி வசதியை செயல்படுத்த உள்ளது.

இதற்கான நிகழ்ச்சி நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், எச்.சி.எல் அதிகாரி அருன்குமார் ராயப்பன், அறம் அறக்கட்டளை நிறுவனர் லதா சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த இணையவழி கல்வி வசதி மூலம் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயிலும் சுமார் 11 ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் பயன் பெறுவார்கள் எனவும் அதற்கான வகுப்புகளை ஆசிரியர்கள் கால நேர அட்டவணையின்படி பாடங்களுக்கான நேரடி வகுப்புகள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை அல்லது காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்துவார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்ச்சியில் 65 அரசு பள்ளிகளுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய முக கவசம் மற்றும் 10 லிட்டர் கை கழுவும் திரவங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...