கோவை அரசு கலைக்கல்லூரியில் தேர்வு கட்டணங்களை இணையதள வாயிலாக செலுத்த அறிவுறுத்தல்!

கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் தேர்வு கட்டணங்களை இணையதள வாயிலாக செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் தேர்வு கட்டணங்களை இணையதள வாயிலாக செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இக்கல்லூரியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரி திறக்கப்படாமல் இருந்ததால் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டன.

இதனிடையே, கடந்த 2ம் தேதி முதுநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மாணவ, மாணவிகள் கல்லூரி வருவதற்கு அனுமதிக்கப்பட்டனர். அதன் பின் கடந்த 7ம் தேதி கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவ, மாணவிகள் கல்லூரி வர அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வரும் 14ம் தேதி முதல் 30ம் தேதி வரை பருவத்தேர்வுகள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான தேர்வுக் கட்டணத்தை இணையதள வாயிலாக செலுத்த வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கோவை அரசு கலைக்கல்லூரியில் தேர்வுக் கட்டணங்கள் இணையதள வாயிலாக செலுத்தப்பட உள்ளது இதுவே முதல் முறையாகும். தேர்வு கட்டணத்தை www.gacbe.ac.in என்கிற இணையதள வாயிலாக செலுத்த வேண்டும். இந்த தகவலை அரசு கலைக்கல்லூரி முதல்வர் சித்ரா தெரிவித்தார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...