கோவையில் வரும் டிச., 17ம் தேதி தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ 41வது பட்டமளிப்பு விழா!

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ 41-வது பட்டமளிப்பு விழா, வரும் டிசம்பர்‌ 17, 2020 அன்று மாலை 4.00 மணியளவில்‌ பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில்‌ கொரோனா தொற்று பரவல்‌ தடுப்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகளைப்‌ பின்பற்றி நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில்‌ இந்திய குடியரசு துணைத்தலைவர்‌ ஸ்ரீ மு.வெங்கையா நாயுடு அவர்கள்‌ சிறப்பு விருந்தினராகப்‌ பங்கேற்று பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்த உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ நீ. குமார்‌ அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

இவ்விழாவிற்கு, தமிழக ஆளுநரும்‌ மற்றும்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ வேந்தருமான பன்வாரிலால்‌ புரோகித்‌ அவர்கள்‌

தலைமையேற்கிறார்‌. வேளாண்மைத்‌ துறை அமைச்சரும் இப்பல்கலைக்கழகத்தின்‌ இணை வேந்தருமான கே.பி. அன்பழகன்‌ அவர்கள்‌ புதிய அறநல்கை பரிசுகளையும்‌, பதக்கங்களையும்‌ அறிவிக்க உள்ளார்‌.

இப்பட்டமளிப்பு விழாவில்‌ 1385 மாணவர்கள்‌ நேரடியாகவும்‌ (in person) 57 மாணவர்கள்‌ தபால்‌ மூலமாகவும்‌ (in absentia) பட்டங்களைப்‌ பெற உள்ளார்கள்‌ என்று பல்கலைக்கழக பதிவாளர்‌ முனைவர்‌ அ.சு. கிருட்டிணமூர்த்தி அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...