தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளமறிவியல்‌ மாணவர்‌ சேர்க்கை கலந்தாய்வு 2020!

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக இளமறிவியல்‌ மாணவர்‌ சேர்க்கைக்கான கலந்தாய்வு 2020-ன்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பு பணிகள்‌ இன்று தொடங்கியுள்ளது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக இளமறிவியல்‌ மாணவர்‌ சேர்க்கைக்கான கலந்தாய்வு 2020-ன்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பு பணிகள்‌ இன்று தொடங்கியுள்ளது.



இந்த முதல்கட்ட கலந்தாய்வு இன்று முதல்‌ 12.12.2020 வரை 6 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்‌ என பல்கலைக்கழக முதன்மையர்‌ (வேளாண்மை) மற்றும்‌ மாணவர்‌ சேர்க்கை தலைவர்‌ முனைவர்‌ மா. கல்யாண சுந்தரம்‌ அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

தமிழக அரசின்‌ கொரோனா தொற்று பரவல்‌ தடுப்பு வழிமுறைகளைப்‌ பின்பற்றி தினமும்‌ 600 மாணவர்கள்‌ வரவழைக்கப்பட்டு அவர்களின்‌ சான்றிதழ்கள்‌ சரிபார்க்கப்பட்டு அவர்களுக்குண்டான சேர்க்கை ஆணை வழங்கப்படும்‌.



இந்நிலையில், இன்று பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ நீ. குமார்‌ அவர்கள்‌ இளமறிவியல்‌ வேளாண்மையில்‌ முதல்‌ மூன்று இடங்களைப்‌ பெற்ற மாணவர்களுக்கும்‌ மற்றும்‌ மற்ற பாடப்பிரிவுகளில்‌ முதல்‌ இடத்தைப்‌ பெற்ற மாணவர்களுக்கும்‌ சேர்க்கை ஆணைகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்‌.

இந்நிகழ்வில்‌ பல்கலைக்கழக பதிவாளர்‌ முனைவர்‌ அ.சு. கிருட்டிணமூர்த்தி, மற்றும்‌ பல்கலைக்கழக பேராசிரியர்கள்‌ கலந்து கொண்டு சிறப்பித்தனர்‌.



முன்னதாக, பட்டயப்படிப்பு மாணவர்களுக்கான கலந்தாய்வுக்கு 1392 மாணவர்கள்‌ வரவழைக்கப்பட்டு 746 மாணவர்களுக்கு பல்கலைக்கழக உறுப்புக்‌ கல்லூரிகள்‌ மற்றும்‌ இணைப்புக்‌ கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தால்‌ வழங்கப்‌ பெறும்‌ அனைத்து வேளாண்மை பாடப்பிரிவுகளிலும்‌ மாணவர்கள்‌ தங்களுக்கான பாடப்பிரிவை

தேர்வு செய்வதில்‌ தொடர்ந்து ஆர்வம்‌ காட்டி வருகின்றனர்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...