கோவை வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரியில்‌ உணவு தொழில்நுட்ப நிறுவனங்களின் கலந்துரையாடல்‌ கருத்தரங்கு மற்றும்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்திலுள்ள வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌ மற்றும்‌ உணவு பதன்செய்‌ நிறுவனங்கள்‌ கலந்துரையாடல் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்திலுள்ள வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌ மற்றும்‌ உணவு பதன்செய்‌ நிறுவனங்கள்‌ கலந்துரையாடல் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.



இந்த கருத்தரங்கில்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ நீ. குமார்‌ அவர்கள்‌ உணவு தொழில்நுட்ப மாணவர்கள்‌ மற்றும்‌ விஞ்ஞானிகள்‌ தொழில்நுட்ப நிறுவனங்களுடன்‌ இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்‌ என்று வலியுறுத்தினார். வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலைய முதன்மையர்‌ முனைவர்‌ பா.பரதர்‌ அவர்கள்‌ வரவேற்புரை வழங்கி உணவு பதன்செய் தொழில் நுட்பத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்‌.

மேலும்‌, வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்கக இயக்குநர்‌ முனைவர்‌ எஸ்‌.டி. சிவக்குமார்‌ அவர்கள்‌ கல்லூரி மற்றும்‌ உணவு தொழில்நுட்ப நிறுவனங்கள்‌ கலந்துரையாடல்‌ கருத்தரங்கின்‌ நோக்கங்கள்‌ மற்றும்‌ பயன்கள்‌ குறித்து எடுத்துரைத்தார்‌. முன்னோடி உணவு பதன்செய்‌ நிறுவனங்களின்‌ தலைமை நிர்வாக அதிகாரிகள்‌ மற்றும்‌ தொழில்நுட்ப நிறுவனங்களின்‌ வல்லுநர்கள்‌ இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு கல்லூரி மற்றும்‌ உணவு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துவதற்கான தங்களது மேலான கருத்துக்களை எடுத்துரைத்தனர்‌.

மேலும், கோத்தகிரியிலுள்ள கீஸ்டோன்‌ அறக்கட்டளையுடன்‌ இயற்கை மூலப்பொருட்களிலிருந்து சாறுகளைப்‌ பிரித்தெடுப்பதற்கான தொழில்நுட்ப உதவிகளை பெறுவதற்காகவும்‌ மற்றும்‌ கோவையில்‌ செயல்படும்‌ நிறுவனமான ப்ரோசன்‌ எனர்ஜியுடன்‌ சூரிய ஆற்றலுக்கான சிறப்பு மையம்‌ அமைக்கவும்‌ 18.11.2020 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தமானது தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக பதிவாளர்‌ ஏ.எஸ்‌. கிருஷ்ணமூர்த்தி அவர்களால்‌ துணைவேந்தர்‌ முன்னிலையில்‌ கையெழுத்திடப்பட்டது.

மாணவர்கள்‌, விவசாயிகள்‌ மற்றும்‌ தொழில்‌ முனைவோர்‌ முதலானவர்களுக்கு சூரிய ஆற்றலில்‌ வளர்ந்து வரும்‌ தொழில்நுட்பங்களைக்‌ காட்சிப்படுத்தவும்‌, எடுத்துரைக்கவும்‌ இச்சிறப்பு மையம்‌ வழிவகை செய்கிறது. இறுதியாக உணவு பதன்செய் பொறியியல்‌ துறைத்தலைவர்‌ முனைவர்‌ பெ.இராஜ்குமார்‌ அவர்கள்‌ நன்றியுரை வழங்கினார்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...