கோவை எஸ்.என்.எஸ் கல்லூரியில் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் நவீன காட்சியகம் திறப்பு!

கோவை: கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் நவீன காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் நவீன காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.



மாணவர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தும் லிக்யுட் ஸ்டுடியோ எனும் காட்சியகம் திறப்பு விழா கோவை சரவணம்பட்டி பகுதியிலுள்ள எஸ்.என்.எஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி செயலர் நளின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணை செயலாளர் விஷ்ணு பிரபு மற்றும் கோவை மாவட்ட வருவாய் துறை அலுவலர் ராமதுறை உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு காட்சியகத்தை திறந்து வைத்தனர்.

முன்னதாக இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு மாணவர்களால் வரையப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவர்கள் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு அதன் தனித்துவங்களை கேட்டறிந்தனர்.



கொரோனா கால கட்டத்தில் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தாலும் தங்கள் கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு இணையதளம் மூலம் அனைத்து வகையிலான தொழில்நுட்பங்களையும் கற்பித்து தருவதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பிற்கும் தனியே நிதி ஒதுக்கீடு செய்வதாக கூறிய நிர்வாகத்தினர், இந்த புதிய காட்சியகத்தில் கார் பந்தையத்தில் பங்கேற்கும் நவீன கார், கரும்பு ஆலையில் கரும்பின் கனுவை பிரித்தெடுக்கும் இயந்திரம், வாகனங்களை கட்டுப்படுத்தும் கருவிகள் உட்பட சுமார் 15 வகையிலான புதிய நவீன கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறினர்.



முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பாசறை துணை செயலாளர் விஷ்ணுபிரபு, இந்த நவீன காட்சியகம் மாணவர்களின் புத்தாக்க முயற்சிகளுக்கு பெரும் உந்துதலாக இருக்கும் எனவும் இதன் மூலம் பல தகவல்களை தான் தெரிந்து கொண்டதாகவும் கூறினார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...