தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக தஞ்சாவூர்‌ உறுப்புக்‌ கல்லூரியின் உலக சாதனை முயற்சி!

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ உறுப்பு கல்லூரியான தஞ்சாவூர், ஈச்சங்கோட்டை, வேளாண்மைக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தின்‌ உலக சாதனை முயற்சியாக இணையத்தின்‌ வாயிலாக தேசிய மகளிர்‌ விவசாயிகள்‌ மற்றும்‌ உலக மாணாக்கர்‌ தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் 20 மணி நேர தொடர்‌ இணையவழி சொற்பொழிவுகள்‌ நடைபெற்றது.



கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ உறுப்பு கல்லூரியான தஞ்சாவூர், ஈச்சங்கோட்டை, வேளாண்மைக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தின்‌ உலக சாதனை முயற்சியாக இணையத்தின்‌ வாயிலாக தேசிய மகளிர்‌ விவசாயிகள்‌ மற்றும்‌ உலக மாணாக்கர்‌ தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் 20 மணி நேர தொடர்‌ இணையவழி சொற்பொழிவுகள்‌ நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ “பொன்‌ விழா' கொண்டாட்டத்தின்‌ ஓர்‌ அங்கமாக வேளாண்மைக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌, ஈச்சங்கோட்டையை சேர்ந்த நாட்டு நலப்பணித்‌ திட்ட மாணவர்களால்‌ இந்த சாதனை அரங்கேற்றப்பட்டது.

இந்த நிகழ்வில்‌ மாநிலத்தின்‌ பல்வேறு பகுதிகளில்‌ இருந்து முனைவர்கள்‌ இந்திய வேளாண்மையில்‌ மகளிரின்‌ முக்கிய பங்கு மற்றும்‌ இந்திய சமுதாயத்தில்‌ மாணவர்களின்‌ வளர்ச்சி போன்ற தலைப்புகளில்‌ உரையாற்றினர்‌. இந்த நிகழ்வின்போது வேளாண்‌ பட்டப்படிப்பு பற்றியும்‌ திறன் மேம்பாடு மற்றும்‌ வேலைவாய்ப்புகள்‌ பற்றியும்‌ நாட்டின்‌ பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்துகொண்ட மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

இந்த நிகழ்வானது அக்டோபர்‌ 15, 2020 காலை 9.00 மணியளவில்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ பேராசிரியர்‌ முனைவர்‌ நீ. குமார்‌ அவர்களால்‌ இனிதே துவங்கப்பட்டது. இன்றைய வேளாண்மை சூழலில்‌ மகளிரின் பங்கு மற்றும்‌ அதனை ஊக்குவிப்பது பற்றியும்‌ உரையாற்றினார்‌.

இந்த நிகழ்வில்‌ கோவை வேளாண்மைக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலைய முதன்மையர்‌ வேளாண்மை முனைவர்‌ மா. கல்யாணசுந்தரம்‌, மற்றும்‌ முதன்மையரார்‌ (மாணவர் நல மையம்‌) முனைவர்‌ தி. இரகுசந்தர்‌, சிறப்புரையாற்றினர். முன்னதாக, தஞ்சாவூர்‌ ஈச்சங்கோட்டை, வேளாண்மைக் கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலைய முதன்மையர்‌, முனைவர்‌, வேலாயுதம்‌, வரவேற்புரை வழங்கினார்‌.

மேலும்‌, இந்த நிகழ்ச்சியை ஒட்டி பல்வேறு போட்டிகள்‌ இந்திய அளவில்‌ நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு இடையிடையே போட்டிகளுக்கான முடிவுகள்‌ சிறப்பாக வெளியிடப்பட்டன. மேலும்‌ போட்டிகளில்‌ நாடு முழுவதும்‌ பல்வேறு பல்கலை கழகங்களிலிருந்து பல்வேறு மாணவர்கள்‌ ஆர்வத்துடன்‌ பங்கேற்றனர்‌.

மேலும்‌, இந்த இணையவழி நிகழ்ச்சியில்‌ வேளாண்மையில்‌ மகளிரின்‌ பங்கு பற்றிய கருத்துகளான ஒருங்கிணைந்த பண்ணையம்‌, மண்வள மேலாண்மை, பண்ணை மகளிர்‌ மற்றும்‌ பருவநிலை மாற்ற வேளாண்மையில்‌ மகளிரின்‌ பங்கு பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

மேலும்‌, இந்த நிகழ்வில்‌, வேளாண்மை பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள்‌, மேற்படிப்புகள்‌, மாணவர்களின்‌ திறன் மேம்பாடு, மாணவர்களின்‌ ஆரோக்கியத்திற்கேற்ற யோகா போன்ற பல்வேறு தலைப்புகளில்‌ பல்கலைக்கழகத்தின்‌ பல்வேறு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து பேராசிரியர்கள் மாணவர்களுக்கு உரையாற்றினர்‌. மேலும்‌ இந்த நிகழ்வு “YOU TUBE’ இல்‌ நேரலையாக தடையின்றி 20 மணிநேரமும்‌ ஒளிபரப்பப்பட்டு 2000 பார்வையாளர்களை கடந்தது. இந்த நிகழ்வானது அக்டோபர்‌ 16, 2020 காலை 6.30 மணியளவில்‌ இனிதே நிறைவுற்றது. இது ஓர்‌ உலக சாதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது.

இறுதியாக, முனைவர்‌ S.மதியழகன்‌, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்‌,

நன்றியுரை நல்கினார்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...