தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக பட்டயப்படிப்புகளுக்கான மாணவர்‌ சேர்க்கை..!

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக பட்டயப்படிப்புகளுக்கான மாணவர்‌ சேர்க்கை 2020-2021 விண்ணப்பங்களை வரும் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக பட்டயப்படிப்புகளுக்கான மாணவர்‌ சேர்க்கை 2020-2021 விண்ணப்பங்களை வரும் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழத்தின்‌ கீழ்‌ இயங்கி வரும்‌ 3 உறுப்புக்‌ கல்வி நிலையங்கள்‌ மற்றும்‌ 10 இணைப்புக்‌ கல்வி நிலையங்களில்‌ பயிற்றுவிக்கப்படும் வேளாண்மை மற்றும்‌ தோட்டக்கலை பட்டயப்படிப்புகளுக்கான 2020-2021 ஆம்‌ வருடத்திற்கான 860 இடங்களுக்கான மாணவர்‌ சேர்க்கை கடந்த 10.09.2020 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

மாணவர்‌ சேர்க்கை குறித்த இதர விபரங்களை அறிந்து கொள்ள https://tnauonline.in இணையதளத்தில்‌ உள்ள தகவல்‌ கையேடு உதவிகரமாக இருக்கும்‌.

விண்ணப்பதாரர்கள்‌ பல்கலைக்கழகத்தின்‌ இணையதளத்தில்‌ (https://tnauonline.in) உள்ள விண்ணப்பத்தினை இணையதள வாயிலாக (online) பூர்த்தி செய்து பின்பு பதிவிறக்கம்‌ (Download) செய்யப்பட்ட விண்ணப்பத்துடன்‌ உரிய கட்டணம்‌ (Demand Draft) மற்றும்‌ சான்றிதழ்களை இணைத்து முதன்மையர்‌ (வேளாண்மை) மற்றும்‌ தலைவர்‌ (மாணவர்‌ சேர்க்கை), தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயமுத்தூர்‌ - 641 003 என்ற முகவரிக்கு பதிவுத்‌ தபாலில்‌ 21.10.2020 மாலை 5 மணிக்குள்‌ அனுப்பிவைக்க வேண்டும்‌.

மேலும்‌, விண்ணப்பதாரர்கள்‌ அரசு கணினி சேவை மையங்களை தொடர்பு கொண்டும்‌, இணையதள வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்‌. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசிநாள்‌ 16.10.2020 பதிவிறக்கம்‌ செய்யப்பட்ட விண்ணப்பம்‌ மற்றும்‌ விண்ணப்பக்கட்டணம்‌ (கேட்பு வரைவோலை) தபால்‌ மூலம்‌ வந்து சேர வேண்டிய கடைசிநாள்‌ 21.10.2020, மாலை 5 மணி மற்றும்‌ தரவரிசைப்பட்டியல்‌ 29.10.2020 அன்று வெளியிடப்படும்‌.

எனவே, விருப்பமுள்ள மாணவர்கள்‌ தங்களின்‌ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம்‌ செய்து உரிய சான்றிதழ்கள்‌ மற்றும்‌ விண்ணப்பக்கட்டணம்‌ (கேட்பு வரைவோலை) அனைத்தையும்‌ சேர்த்து தபால்‌ மூலம்‌ (21.10.2020) மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு முனைவர்‌ மா. கல்யாணசுந்தரம்‌, முதன்மையர்‌ (வேளாண்மை) மற்றும்‌ தலைவர்‌ (மாணவர்‌ சேர்க்கை) அவர்கள்‌ கேட்டுக்கொள்கிறார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...