தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டி: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிக்கு முதல் பரிசு!

கோவை: இந்திய அளவில் நடந்த ஹேக்கத்தான் போட்டியில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளது.








கோவை: இந்திய அளவில் நடந்த ஹேக்கத்தான் போட்டியில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளது.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தேசிய அளவில் பல hakcathons -இல் வென்ற ஆகஸ்ட் மாதம் ஒரு நிகழ்வு நிறைந்த மாதமாகும். கணினி அறிவியல் மற்றும் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், இயந்திர பொறியியல் மற்றும் மின் மற்றும் மின்னணு பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர் குழு hakcathons -இல் பங்கேற்று ரொக்க விருதுகளுடன் முதலிடம் பிடித்தது.

நிலையான வளர்ச்சியில் தொழில்களில் இருந்து வரும் CEMS / CEQMS மாசுபாடுகளை கண்காணிப்பதற்கான கிளவுட் அடிப்படையிலான பயன்பாட்டின் வளர்ச்சி எனும் அறிக்கையில் அவர்கள் பணியாற்றினர். 168 பங்கேற்பாளர்களை கொண்ட 28 அணிகளில் இந்த அணி முதலிடத்தைப் பிடித்தது.



ஜெயராம் டி, ஜெயந்தி பி, தயானிதி பாலாஜி கே கே, பேபி ஷாலினி வி, தியானேஷ்வரன் கே மற்றும் ஜமால் ரபியா எச் ஆகியோர் அடங்கிய மாணவர் அணி முதல் பரிசாக ரூ. 1 லட்சம் தொகையை பெற்றனர். இந்த குழுவிற்கு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் இணை பேராசிரியர் டாக்டர் ஆர். கிங்ஸி கிரேஸ் வழிகாட்டினார்.

தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த மாணவர்கள் குழு IBM –Code Global Challenge Edition -the TechGig Code Gladiators 2020 # CodeInQuarantine 150 நாட்கள் hackathon போட்டியில் கலந்து கொண்டு ரூ 1.5 லட்சம் பரிசு தொகையை பெற்றுள்ளனர். சி.ஆர்.அருணாச்சலம் மற்றும் தனுஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையின் இணை பேராசிரியர் டாக்டர் ப்ரீத்தி ஹாரிஸ் வழிகாட்டினார்.

இயந்திர பொறியியல் மற்றும் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையை சேர்ந்த மாணவர்கள் TATA Crucible Hackthon 2020 தெற்கு மண்டல பதிப்பில் கலந்து கொண்டு முதலிட விருது மற்றும் ரொக்க தொகையாக ரூ. 70,000/ -பெற்றுள்ளனர்.

ரிஷி பி, ஜெகதீஷ் எம், ரிபி ஜே, விக்னேஷ் எம், சந்தோஷ் குமார்.என் ஆகியோரை கொண்ட குழுவை இயந்திர பொறியியல் உதவி பேராசிரியர் பி பிரணேஷ் மற்றும் மின் மற்றும் மின்னணு பொறியியல் உதவி பேராசிரியர் ஆர் கே ராகவபிரியா ஆகியோர் வழிநடத்தினர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...