பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது

கோவை: பொள்ளாச்சி பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம், பி.எஸ்.சி கணிதம், பி.காம் தொழில்முறை கணக்குப்பதிவியல், ஆகிய பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று, ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடைபெற்றது.








கோவை: பொள்ளாச்சி பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம், பி.எஸ்.சி கணிதம், பி.காம் தொழில்முறை கணக்குப்பதிவியல், ஆகிய பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று, ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடைபெற்றது.

அதற்கான, விண்ணப்ப படிவம் ஆன்லைன் வாயிலாக பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து மாணவர்கள் கலந்தாய்வின் பொது கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது.



இதன்படி, விண்ணப்பங்கள் கொண்டு வந்த மாணவர்களுக்கு, கல்லூரி வளாகத்தில், சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று (13ம் தேதி) துவங்கியது.

இன்று நடந்த கலந்தாய்வுக்கு, முதல்வர் அன்பழகன் (பொறுப்பு) தலைமை வகித்தார். முதல்கட்டமாக, ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. தொடர்ந்து, தொழில்கல்வி பிரிவினருக்கும், தரவரிசை எண் 1 முதல் 100 வரை உள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது.

இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில்:

மொத்தம் 488 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று 135 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 95 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து நாளை (14ம் தேதி) மற்றும் 17ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும்.

மேலும், கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 1 வகுப்பு சான்றிதழ், ஜாதி, இருப்பிடச் சான்றிதழ், அல்லது ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவை அசல் சான்றிதழ்களும், ஒவ்வொரு சான்றிதழ்களும் தல மூன்று நகல்கள் எடுத்து வரவேண்டும். மேலும், ஐந்து பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் கொண்டு வர வேண்டும், என்று தெரிவித்தனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...