தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு!

கோவை: இந்திய அளவில் நடந்த ஹேக்கத்தான் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்களை கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி பாராட்டினார்.


கோவை: இந்திய அளவில் நடந்த ஹேக்கத்தான் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்களை கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி பாராட்டினார்.

கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு கணிப்பொறியியல் மாணவர்களான விஜயாலன், ஸ்வேதா, நவீன் குமார், நிதின், சஞ்சய் குமார் மற்றும் கிரண் சுப்ரமணியன் கொண்ட ஸிரோ பகர்ஸ் என்னும் அணி மத்திய அரசின் மனித வளமேம்பாட்டுத் துறை மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கழகம் இணைந்து இந்திய அளவில் நடத்திய ஹேக்கத்தான் போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 1 லட்சத்தை வென்றனர்.

பேராசிரியரும் கணிப்பொறி மற்றும் வணிக அமைப்பு தலைவருமான முனைவர். பாலகிருஷ்ணன் இந்த மாணவர்களை வழிநடத்தினார். இந்த மாணவர்கள் சிறை நிர்வாக மேம்பாட்டிற்காக புதிய ஆராய்ச்சி படைப்பினை உருவாக்கியுள்ளனர்.

சிறையில் சந்தேகத்திற்குரிய நடமாட்டத்தை கண்காணித்தல் மற்றும் தடுத்தல் என்ற தலைப்பில் சண்டிகர் தொழில்நுட்ப கல்வி அமைச்சகத்திற்கு இக்குழு திட்டம் வகுத்து அளித்தது. சிறையில் உள்ள ஒவ்வொரு பகுதியின் முன்பும் வெப்கேம் மற்றும் திரை வைத்து கண்காணிக்கும் புதுமையான திட்டத்தை வகுத்தனர்.

இந்த திட்டத்தில் ஏதேனும் ஒரு கைதி தன் பகுதி விட்டு வெளி சென்றாலோ அல்லது அருகில் இருக்கும் பகுதிக்கு சென்றாலோ ஏதேனும் சந்தேகத்துக்குரிய தெரிந்தாலோ முக அங்கீகாரம், சைகை அங்கீகாரம் மற்றும் பேச்சு அங்கீகாரம் முதலியன வைத்து சிறையில் கைதிகளிடையே நடக்கும் தேவை இல்லாத செயல்களை தடுக்க முடியும்.

இந்த மாணவர்களையும், இத்துறையின் பேராசிரியர்களை இக்கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் கே.சுந்தரராமன், இக் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெ.ஜேனட் வெகுவாக பாராட்டினார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...