ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020: கோவை கல்லூரி மாணவர்களிடம் இந்திய பிரதமர் உரையாடல்

கோவை: கோவை குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் இன்று "ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020" மென்பொருள் உருவாக்கும் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் இன்று "ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020" மென்பொருள் உருவாக்கும் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கழகத்துடன் இணைந்து கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இந்நிகழ்வு நடைபெற்றது. நான்காவது ஆண்டாக இந்த போட்டியானது இந்த கல்லூரியில் நடைபெறுகின்றது.

இந்நிலையில், இன்று முதல் வரும் 3ம் தேதி வரை தொடர்ந்து 36 மணி நேரம் இடைவிடாது இந்த மென்பொருள் உருவாக்கும் போட்டியானது நடத்தப்படுகின்றது. கோவிட் 19 காரணமாக இம்முறை முற்றிலும் இணையம் வழியாகவே இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், ஹைதராபாத், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார். முதலாவதாகக் கோவையில் மாணவ-மாணவிகள் போட்டியாளர்களுடன் கலந்துரையாடலை துவக்கிய பிரதமர் நரேந்திர மோடி, வணக்கம் என கூறி உரையை துவக்கினார்.

இதன் பின்னர் மாணவி ஸ்வேதா Msc Software system படிக்கும் மாணவி முதலில் பிரதமரிடம் பேசிய போது, வெள்ள பெருக்கில் கரையின் தடுப்பணைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகும் பட்சத்தில் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதனை பராமரிப்பது எப்படி என்பன குறித்து கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் 6 பேர் இணைந்து மென்பொருள் தயார் செய்து வருகின்றனர். வெள்ள பெருக்கின் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் பயன்படும் என மாணவி தெரிவித்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்த முயற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும், முதலில் சிறிய அளவில் முயற்சி செய்து கொள்ளவும் என்று அறிவுறுத்தினார்.

இதன் பின்னர் இரண்டாவதாக à®®à®¾à®£à®µà®°à¯ குந்தன் Bsc (computer science & design) பிரதமரிடம் பேசினார்.

அப்போது, குற்றங்களை பதிவு செய்ய தற்போது நேரடியாக சென்று கணினி மூலம் பதிவிடும் முறை நடைமுறையில் உள்ளது. காவல் நிலையம் சொல்லாமலே புகார் அளிப்பதை தவிர்க்கும் சாட்பாட் முறையை 6 பேர் உருவாக்கி வருகின்றனர் எனவும், இந்த சாட்பாட் ஆனது அருகில் உள்ள காவல் நிலையங்களை காண்பிக்கும் வகையிலும், சாட்பாட் மூலமாகவும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் பயமின்றி தகவல் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்பொழுது பிரதமர் à®®à¯‹à®Ÿà®¿ இந்த டிவைஸ் மற்ற மொழிகளிலும் வடிவமைக்க முடியுமா மாணவரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மாணவர், தேவையான தரவுகள் கொண்டு பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.

பின்னர் கலந்துரையாடலில் பிரதமர் மோடி பேசிய போது, இந்திய இளைஞர்களிடையே அதிக திறமைகள் உள்ளது. ஒரு நாட்டின் பிரதமராக இருந்தாலும் நமது மாணவர்கள் இந்தியா மற்றும் பிற நாடுகளில் பங்கேற்கும் போட்டிகளை கவனித்து வருகிறேன். இதில் மாணவர்கள் வெளிப்படுத்தும் திறமைகளை கண்டு அவர்களின் ஆய்வு எண்ணங்களை மற்றும் படைப்புகளை நாடு முன்னேற பயன்படுத்தி வருகிறோம். மாணவர்களின் சிறந்த படைப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் கட்டாயமாக எடுத்துக்கொள்வோம் என்றார்.

மேலும், நமது நாடு வளர இளைஞர்களின் பங்கு மிகவும் அவசியமாகும். புதிய படைப்புகளை உருவாகும் பொழுது, அது அடிப்படை மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அதே போல அலைபேசியில் உருவாக்கும் படைப்புகள் அனைத்தும் உள்ளூர் மக்கள் புரிந்துகொள்ளும் வடிவில் இருக்க வேண்டும். மேலும் பிராந்திய மொழிகளில் படைப்புகளை புரியும் படி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இக்கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர்.கே.சுந்தரராமன், இக் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜே.ஜேனட், மெக்கானிக்கல் துறைத் தலைவர் முனைவர் பி. அசோக வர்த்தனன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...