கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கு மதிப்பெண்‌ வழங்கும்‌ முறையை அறிவித்தது உயர் கல்வித்துறை!

சென்னை: தமிழகம்‌ முழுவதும்‌ பல்கலையில் செமஸ்டர்‌ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்‌ மதிப்பெண்‌ வழங்கும்‌ முறையை உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.


சென்னை: தமிழகம்‌ முழுவதும்‌ பல்கலையில் செமஸ்டர்‌ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்‌ மதிப்பெண்‌ வழங்கும்‌ முறையை உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மூடப்பட்டுள்ள கல்லூரி மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு தேர்வுகளை நடத்துவது கடினம் என்பதால், அந்த தேர்வுகளை ரத்து செய்து அரசு கடந்த வாரம் அரசாணை வெளியிட்டது.

இந்த நிலையில், முந்தைய பருவத்தேர்வு மதிப்பெண் 30%, அகமதிப்பீட்டில்‌ 70% கணக்கிட்டு மதிப்பெண்‌ வழங்கப்படும்‌ என்று மதிப்பெண்‌ வழங்கும்‌ முறையை உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும், முந்தைய பருவத்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெறாத மாணவர்கள்‌ மீண்டும்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...