தேசிய தரவரிசை பட்டியலில் கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள்‌ மகளிர்‌ கல்லூரி 10வது இடம் பிடித்து சாதனை!

கோவை: தேசிய தரவரிசை பட்டியலில் (National Institutional Ranking Framework) கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள்‌ மகளிர்‌ கல்லூரி இந்திய அளவில்‌ 10வது இடத்தைப்‌ பெற்றுள்ளது.


கோவை: தேசிய தரவரிசை பட்டியலில் (National Institutional Ranking Framework) கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள்‌ மகளிர்‌ கல்லூரி இந்திய அளவில்‌ 10வது இடத்தைப்‌ பெற்றுள்ளது.

தேசிய தரவரிசை பட்டியலை (National Institutional Ranking Framework) இந்திய அரசின்‌ மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கடந்த 11ம் தேதியன்று வெளியிட்டது. சுமார் 1659 கல்லூரிகள் பங்கேற்ற இந்த பட்டியலில் கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள்‌ மகளிர்‌ கல்லூரி இந்திய அளவில்‌ 10வது இடத்தைப்‌ பெற்றுள்ளது.

கோவையில் கடந்த அறுபது ஆண்டுகளாக பாரதியார்‌ பல்கலைக்‌ கழகத்திற்கு உட்பட்ட இக்கல்லூரி ஒரு முழுமையான முதல்‌ தரமான கல்லூரியாக விளங்குகிறது. இளங்கலை வகுப்புகள்‌, முதுகலை வகுப்புகள்‌, சிறந்த ஆய்வகங்களுடன்‌ கூடிய ஆராய்ச்சி நிறுவனமாக இக்கல்லூரி அமைந்துள்ளது.

இந்தக்‌ கல்லூரி, 2016ம்‌ ஆண்டு முதல்‌ யுஜிசி சான்றளிக்கப்பட்ட முதன்மை சிறப்பு கல்லூரி என்ற தகுதியை பெற்றது. மேலும், இந்திய தரவரிசைப்‌ பட்டியல்‌ தொடங்கியதில் இருந்து பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள்‌ மகளிர்‌ கல்லூரி முதல்‌ 25 இடங்களில்‌ இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...