வேளாண்‌ பல்கலைக்கழகத்தில் முனைவர்‌ பட்ட ஆய்வுக்கட்டுரையை இணைய வழி மூலம்‌ சமர்த்த மாணவி!

கோவை: தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழக மாணவி சினேகா பாட்டில்‌, பயிர்‌ நோயியல்‌ துறையில்‌ கடந்த மூன்று ஆண்டுகளாக அவரது முனைவர்‌ பட்ட படிப்பிற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தார்‌. அவர்‌ தனது ஆய்வுக்‌ கட்டுரையை “தக்காளியில்‌ ஸ்ட்ரெப்டோமசைின்‌ வளர்சிதை மாற்றத்தின்‌ எதிர்ப்பு மற்றும்‌ உணர்திறன்‌ மற்றும்‌ நோய்‌ மேலாண்மைக்கான உத்திகள்‌” என்ற தலைப்பில் சமர்ப்பித்தார்‌.


கோவை: தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழக மாணவி சினேகா பாட்டில்‌, பயிர்‌ நோயியல்‌ துறையில்‌ கடந்த மூன்று ஆண்டுகளாக அவரது முனைவர்‌ பட்ட படிப்பிற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தார்‌. அவர்‌ தனது ஆய்வுக்‌ கட்டுரையை “தக்காளியில்‌ ஸ்ட்ரெப்டோமசைின்‌ வளர்சிதை மாற்றத்தின்‌ எதிர்ப்பு மற்றும்‌ உணர்திறன்‌ மற்றும்‌ நோய்‌ மேலாண்மைக்கான உத்திகள்‌” என்ற தலைப்பில் சமர்ப்பித்தார்‌.

கொரோனா தொற்று நோய்‌ பரவல்‌ மற்றும்‌ ஊரடங்கு காரணமாக மாணவி சினேகா தனது ஆராய்ச்சி முடிவுகளை சமர்ப்பித்து முனைவர்‌ பட்டம்‌ பெறுவதற்கு பல மாதங்கள்‌ ஆகும்‌ என்று கவலைப்பட்டுக்‌ கொண்டிருந்தார்‌.



இச்சமயத்தில்‌ இன்று மாணவி சினேகா அவரது ஆய்வுக்கட்டுரை முடிவுகளை இணைய வழி வாயிலாக பல்கலைக்கழக துணைவேந்தர்‌, ஆராய்ச்சி ஆலோசகர்கள்‌, வகுப்பு தோழர்கள்‌, நண்பர்கள்‌ மற்றும்‌ குடும்ப உறுப்பினர்கள்‌ உள்பட 60க்கும்‌ மேற்பட்டோர்‌ முன்னிலையில்‌ அவரது ஆராய்ச்சி முடிவுகளை விளக்கினார்‌.



ஒரு மணி நேரத்திற்கும்‌ மேலாக நீடித்த இந்த விளக்க காட்சிக்குப்‌ பிறகு, அவருடைய ஐந்து உறுப்பினர்களைக்‌ கொண்ட ஆராய்ச்சிக்‌ குழுவானது மாணவி சினேகாவை முனைவர்‌ பட்டம்‌ பெற்றவராக அறிவித்தனர்‌.

இந்நிகழ்வைப்‌ பற்றி மாணவி சினேகா கூறுகையில், இதை ஒரு நாளும்‌ என்‌ வாழ்வில்‌ நான்‌ கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை மற்றும்‌ தனது வாழ்நாளில் ஒரு மிக முக்கியமான நிகழ்வு இது என்றும்‌ பூரிப்படைந்தார்‌. இருப்பினும்‌ தனது கல்லூரி வாழ்வின்‌ கடைசி காலாண்டை தனது நண்பர்களுடன்‌ அனுபவிக்க முடியாமலேயே கல்லூரிக்‌ காலம்‌ நிறைவடைந்து விட்டது. இது சிறிது வருத்தமாக உள்ளது என்றும்‌ அந்த அந்த மாணவி கூறினார்‌.

தற்போது வெற்றிகரமாக முனைவர்‌ பட்டம்‌ பெற்று மேலும்‌ தைவானின்‌ உலக காய்கறி மையத்தில்‌ மேம்பட்ட முனைவர்‌ பட்ட ஆராய்ச்சியை தொடங்க உள்ளதாக தெரிவித்தார்‌.

வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ நீ. குமார்‌ இம்முயற்சியைப்‌ பாராட்டி முனைவர்‌ பட்டம்‌ பெற்ற மாணவி சினேகாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்‌.

இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த பல்கலைக்கழக முதன்மையர்‌ (முதுநிலை) முனைவர்‌ ஜான்‌ சாமுவேல்‌ கென்னடி, அவர்கள்‌ கொரோனா தொற்று நிலைமை சீரடையும்வரை இணைய வழிகளைப்‌ பயன்படுத்தி ஆய்வுக்‌ கட்டுரை முடிவுகளை à®µà®¿à®³à®•்கும்‌ முயற்சி தொடரும்‌ என்று கூறினார்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...