கோவையில் 'இதயங்கள் அறக்கட்டளை' ஐந்தாம் ஆண்டு விழா: ஏழை குழந்தைகளுக்கு உதவுவதற்கு பாராட்டு..!

இவ்விழாவில், வரலொட்டி ரெங்கசாமி எழுதிய அன்பே சக்தி புத்தகத்தை அறிமுகம் செய்துவைத்து வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் இதயங்கள் அறக்கட்டளைக்கு உதவி வருபவர்கள் அனைவரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.


கோவை: 'இதயங்கள் அறக்கட்டளை' ஐந்தாம் ஆண்டு விழா மற்றும் வரலொட்டி ரெங்கசாமி எழுதிய அன்பே சக்தி புத்தக அறிமுக விழா அவிநாசி ரோட்டில் உள்ள'சித்ரா' கலை அரங்கில் இன்று நடந்தது.



'தினமலர்' நிறுவனத்தின் இணை இயக்குனர், இரா.லட்சுமிபதி தலைமை வகித்து பேசுகையில்,'டைப் 1' சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு உதவும் வகையில் இதயங்கள் அறக்கட்டளை அதன் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் தலைமையில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடைய பணி மிகவும் பாராட்டத்தக்கது. எதிர்வரும் ஆண்டுகளிலும் மேலும் பல ஏழை குழந்தைகளுக்கு மருத்துவ உதவி தொடர வேண்டும் என வாழ்த்துகிறோம்." என்றார்.

தொடர்ந்து வரலொட்டி ரெங்கசாமி எழுதிய அன்பே சக்தி புத்தகத்தை அறிமுகம் செய்துவைத்து வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் இதயங்கள் அறக்கட்டளைக்கு உதவி வருபவர்கள் அனைவரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.



'இதயங்கள் அறக்கட்டளை' நிறுவனத் தலைவர் மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர், டாக்டர். கிருஷ்ணன் சுவாமிநாதன், கூறியதாவது,"சர்க்கரை நோய், 'டைப் 1' மற்றும் 'டைப் 2' என இரண்டு வகைப்படும். பொதுவாக பலருக்கு 'டைப் 2' சர்க்கரை நோய் பாதிப்பு தான் அதிகம் காணப்படும். 'டைப் 1' சர்க்கரை நோய் என்பது மிகவும் அபாயகரமான நோயாகும்.

1 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அடிக்கடி சிறுநீர் கழித்தல், சோர்வு, கண் பார்வை குறைபாடு, அதிக பசி உள்ளிட்டவை இந்நோயின் சில அறிகுறிகள் ஆகும். இந்த நோயை துவக்கத்தில் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள தவறினால் 'டயபடிக் கோமா' என்று சொல்லக்கூடிய நிலைக்கு சென்று மரணம் ஏற்படும்.

இந்த வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் மற்றும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் பாதிக்கப்படும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மருத்துவ உதவி இலவசமாக வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் 'இதயங்கள் அறக்கட்டளை' துவங்கி நடத்தி வருகிறேன்.

இன்று வெற்றிகரமாக ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடி வருகிறோம். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குழந்தைகளுக்கு எங்கள் அறக்கட்டளை சார்பில் இன்சுலின் மற்றும் மருந்து பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

நாங்கள் மேற்கொண்டுள்ள இந்த உன்னத பணிக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து கொண்டே வருகிறது. அவர்கள் அனைவருக்கும் 'இதயங்கள் அறக்கட்டளை' குழுவினர் மற்றும் பயனாளிகள் சார்பில், மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நாங்கள் மேற்கொண்டு வரும் பணிக்கு உதவி அளிக்க விரும்பும் கருணை உள்ளம் கொண்டவர்கள் எங்கள் அறக்கட்டளையை 90428-58882, 85264-21150 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...