திருப்பூரில் நாகப்பட்டினம் பாலிடெக்னிக் கல்லூரியில் 1969-ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு..!

வேகமாக சுழலும் இந்த உலகில் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து வரும் மனிதர்களிடையே தங்களது 53-ஆண்டு கால நட்பை விடாமல் புதுப்பித்து வரும் இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: நாகப்பட்டினம் பாலிடெக்னிக் கல்லூரியில் 1969-ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் ஒன்று கூடிய அளவளாவிய நிகழ்ச்சி திருப்பூரில் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த நாகப்பட்டினம் கடந்த 1991-ஆம் ஆண்டு தஞ்சையில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவானது. நாகப்பட்டினம் தனி மாவட்டமாக பிரிப்பதற்கு முன்பாக தஞ்சை மாவட்டத்துடன் இணைந்திருந்த காலத்தில் 1969-ஆம் ஆண்டு நாகப்பட்டினம் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வானது திருப்பூரில் இன்று நடந்தது.



அந்தக் கல்லூரியில் பயின்ற திருப்பூரைச் சேர்ந்த ராஜப்பா என்ற மாணவர் இந்த சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். வாழ்வில் நம்முடன் எவ்வளவு உறவுகள் இருந்தாலும் நண்பர்கள் இருந்தாலும் அந்த கல்லூரி காலத்து நட்பு என்பது வாழ்வின் இறுதிவரை கூட வரும் ஒன்று என்பதற்குச் சான்றாக இன்று நடந்த முன்னாள் கல்லூரி மாணவர்களின் சந்திப்பு இருந்தது என்றால் அது மிகையாகாது.

கல்லூரியில் ஒன்றாகப் படித்து முடித்து வேலை திருமணம் என பல்வேறு காரணங்களுக்காக நண்பர்களைப் பிரிந்து வேறு வேறு மாவட்டம் மாநிலம் வேறு நாடு என்று பிரிந்து எந்திர வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர்களுக்கு இந்த சந்திப்பானது கல்லூரி காலங்களில் ஞாபகப்படுத்தியது.

பலர் மனைவி மற்றும் பேரக் குழந்தைகளுடன் வந்து இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின் மூலம் தங்களது முதுமைக்கும் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவே அவர்கள் பார்க்கின்றனர். 2012-ஆம் ஆண்டு முதல் முறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்திய வலிவலம் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அதனைத்தொடர்ந்து ஆண்டுதோறும் இதனை பின் தொடர்ந்துள்ளனர்.



பின்னர் 2019-ஆம் ஆண்டு கல்லூரி தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கல்லூரியில் 50ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியையும் நடத்தி உள்ளனர். அதன் பின்னர் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் சந்திக்காமல் தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களில் மட்டுமே இணைந்திருந்தனர்.

இதனிடையே தற்போது மீண்டும் இந்த சந்திப்பு நிகழ்ந்தது முன்னாள் மாணவர்கள் இடையே மிகப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019-ல் சந்தித்த பல முன்னாள் மாணவர்கள் வயது மூப்பு காரணமாகவும் நோய் காரணமாகவும், நண்பர்களையும் இந்த உலகையும் விட்டு சென்றுள்ளனர். சிலர் உடல்நலக்குறைவால் இந்த சந்திப்புக்கு வர முடியவில்லை.



இருப்பினும் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இங்கு சந்தித்து தங்களது கல்லூரி கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.வேகமாக சுழலும் இந்த உலகில் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து வரும் மனிதர்களிடையே தங்களது 53 ஆண்டுக்கால நட்பை விடாமல் புதுப்பித்து வரும் இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...